Tuesday, October 8, 2013

மெல்ல மெல்ல உயிர் குடிக்கும் உயிர் கொல்லி smoking is very dangarous

மெல்ல மெல்ல உயிர் குடிக்கும் உயிர் கொல்லி

by Marikumar

புகைத்­த­லினால் 8 விநாடிக்கு ஒருவர் இறக்­கிறார். உலகில் 10 இல் ஒரு­வ­ரது வாழ்க்கை முடிய புகை­யி­லையே காரணம். உலக அளவில் புகை­யி­லையின் விற்­பனை ஒரு நிமி­டத்­திற்கு ஒரு கோடிக்கும் அதிகம். தின­சரி விற்­பனை 1500 கோடி­யாகும்

மனி­த­ராகப் பிறந்த ஒவ்­வொ­ரு­வருனுக்கும் இறப்பு என்­பது நிச்­சயம் வந்தே தீரும். அதனை அனை­வரும் சந்­தித்தே ஆக­வேண்டும். இதுவே உலக நியதி. எனினும் பலர் வீணாக தமது உயிரை மாய்த்­துக்­கொள்­கின்­றனர். புகைப்­பி­டிக்கும் பழக்­கத்­திற்கு அடி­மை­யா­கி­விடும் ஒரு­வரும் கூட அணு­வ­ணு­வாக தனது உயிரை இவ்­வாறே மாய்த்­துக்­கொள்­கிறார். இதுவும் ஒரு வகையில் தற்­கொலை என்று தான் கூற­வேண்டும்.

இலங்­கையில் புகைத்தல் கார­ண­மாக ஒரு நாளில் மட்டும் 54 பேர் மர­ண­ம­டை­வ­தாக சுகா­தார அமைச்­சினால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வு ஒன்று குறிப்­பி­டு­கின்­றது. மேலும் வருடம் ஒன்­றிற்கு 20 ஆயிரம் பேர் வரை­யானோர் உயி­ரி­ழப்­பதா­கவும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. புகைத்­த­லுக்­காக நாள் ஒன்­றுக்கு 210 மில்­லியன் ரூபா செல­வி­டப்படுகிறது. அதே­வேளை புகைத்­த­லினால் ஏற்­படும் நோய்­க­ளுக்கு வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெறு­ப­வர்­க­ளுக்­காக 12,000 மில்­லியன் ரூபா செல­வி­டப்­ப­டு­கி­றது. இவ்­வ­ளவு பெருந்தொ­கை­யான பணத்­தினை பாழாக்கி மர­ணத்தை கொள்­வ­னவு செய்ய வேண்­டுமா? என்ற கேள்வி சமூ­கத்தில் எழு­கி­றது.

நோயற்ற ஆரோக்­கியமான சமூ­கத்தை உரு­வாக்­க புகை­யிலை மற்றும் அது சார்ந்த பொருட்­களில் சிக்கித் தவிக்கும் சமூ­கத்தை எச்­ச­ரித்து துரத்­தி­ய­டிக்க வேண்டும். அதற்­காக ஆரோக்­கிய வாழ்வை விரும்பும் ஒவ்­வொரு மனி­தனும் தமது பங்­க­ளிப்பை வழங்க வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும்.

புகை­யிலை ஒழிக்­கப்­ப­ட­வேண்­டிய ஒன்று என்­பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது. அதனால் ஏற்­படும் விளை­வு­க­ளையும், பாதிப்­பு­க­ளையும் கருத்தில் கொண்டு பல நாடுகள் புகை­யி­லை­யையும், அது­சார்ந்த பொருட்­க­ளையும் தடை செய்­தி­ருக்­கின்­றன. அத்­தோடு பொது இடங்­களில் புகை பிடிப்­ப­தையும் தடை செய்­தி­ருக்­கின்­றன.

உலகம் முழு­வ­திலும் உள்ள பல நாடு­களில் பொது இடங்­களில் புகை பிடித்தல் தடை செய்­யப்­பட்­டுள்­ளமை சட்­ட­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. மீறிப் பொது இடங்­களில் புகை பிடிப்­போ­ருக்கு தண்­ட­னை­களும் அப­ரா­தங்­களும் வழங்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

அயர்­லாந்தில் மூவா­யிரம் யூரோ அப­ரா­தமும், ஸம்­பி­யாவில் இரண்டு ஆண்­டுகள் சிறைத் தண்­ட­னையும், இஸ்­ரேலில் 1400 டொலர் அப­ரா­தமும் விதிக்­கப்­ப­டு­கின்­றன.

மேலும் இந்­தி­யாவில் 5 வரு­டங்­க­ளுக்கு முன்னர் பொது இடங்­களில் புகை பிடிக்கத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 2010 ஆம் ஆண்டு முதல் இலங்­கை­யிலும் இத்­தடைச் சட்டம் அமுலில் இருந்து வரு­கின்­றது. மேலும் சட்­டத்தை மீறு­வோ­ருக்கு தண்­ட­னை­களும் அப­ரா­தங்­களும் விதிக்­கப்­பட்டும் வரு­கின்­ற­ன. எனினும் இம் முறைமை எவ்­வ­ளவு தூரம் மக்­களால் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது என்­பதும் , மீறு­வோ­ருக்­கான தகுந்த தண்­ட­னை­களும் அப­ரா­தங்­களும் விதிக்­கப்­ப­டு­கின்­றன என்­பதும் கேள்­வியே!

ஆண்டு தோறும் மே 31 அன்று சர்­வ­தேச புகை­யிலை எதிர்ப்பு தினம் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

புகை­யிலைப் பொருட்­களில் அடங்­கி­யுள்ள நச்­சுப்­பொ­ருட்கள் நிக்­கோட்டின், எத்தனோல், நெப்­தி­லோமின் ஹைட்­ரஜன் சயனைட், பைரி, கார்பன் மோனாக்­ஸைடு, அமோ­னியா, கேட்­மியம், பெரோ­னியம், வினைல் குளொரைட் தார், கரி­ய­மில வாயு உள்­ளிட்ட பல இர­சா­ய­னப்­பொ­ருட்கள் சிக­ரெட்டில் அடங்­கி­யுள்­ளன. இவை அனைத்தும் மனி­தனின் உடல் ஆரோக்­கி­யத்தை அசைத்துப் பார்க்கக் கூடிய ஏன் அவன் உயி­ரையே பறிக்கக் கூடிய நச்­சுப்­பொ­ருட்­க­ளாகும்.

பல அதிர்ச்­சி­க­ர­மான

புள்­ளி­வி­ப­ரங்கள்:

நானூறு ஆண்­டு­க­ளுக்கு முன் போர்த்­துக்­கீ­ஸரால் இந்­தி­யாவில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட புகை­யி­லையின் கோரப்­பி­டியில் 11 கோடி இந்­தி­யர்கள் சிக்கித் தவிக்­கின்­றார்கள்.

ஆண்டு தோறும் புகைத்­த­லினால் சாம்­ப­ரா­கு­வோரின் எண்­ணிக்கை 10 ஆயிரம் கோடியைத் தாண்டி விட்­டது.

சிகரெட் மனி­தனைச் சாம்­ப­ராக்­கு­கிற கொள்­ளிக்­கட்டை என்­பது தெளி­வாகத் தெரிந்­தி­ருந்தும் தங்­களின் வாழ்­வையும், பணத்­தையும், உடல் ஆரேக்­கி­யத்­தையும் இழந்து வரு­கி­றார்கள் சிகரெட் பிரி­யர்கள். .

உலக சுகா­தார அமைப்பு உலகில் உள்ள ஆண்­களில் மூன்றில் ஒரு பங்­கி­ன­ருக்கு புகை­பி­டிக்கும் பழக்கம் இருக்­கி­றது என்றும் , இரு­பதாம் நூற்­றாண்டில் இந்த புகை­யிலை பத்து கோடி பேரின் உயிரைப் பறித்­தி­ருக்­கி­றது என்றும் இரு­பத்தோராம் நூற்­றாண்டில் நூறு கோடி பேரின் உயிரை பறிக்க இருக்­கி­றது என்ற தக­வ­லையும் தந்து நம் எல்­லோ­ரையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கு­கி­றது.

ஆண்டு தோறும் 90 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மானோர் மார­டைப்­பினால் இறக்­கின்­றனர். அவர்­களில் அதி­க­மானோர் புகை ­பி­டிப்­ப­தனால் இறக்­கின்­றனர் என்­கி­றது இன்­னொரு அதிர்ச்சித் தகவல்.

புகைத்­த­லினால் 8 விநாடிக்கு ஒருவர் இறக்­கிறார்.

உலகில் 10 இல் ஒரு­வ­ரது வாழ்க்கை முடிய புகை­யி­லையே காரணம்.

உலக அளவில் புகை­யி­லையின் விற்­பனை ஒரு நிமி­டத்­திற்கு ஒரு கோடிக்கும் அதிகம். தின­சரி விற்­பனை 1500 கோடி­யாகும்.

புகை­யிலைப் பொருட்­க­ளினால்

ஏற்­படும் அபா­ய­க­ர­மான

விளை­வு­களும் பாதிப்­பு­க்களும்

புகைப்­பி­டிப்­ப­வர்­க­ளுக்கு ஏற்­படும் நோய்­களில் மிக முக்­கி­ய­மா­னவை மார­டைப்பு, காசநோய், ஆஸ்­துமா, புற்­றுநோய், முடி உதிர்தல், கண் பார்வைக் கோளாறு, தோலில் சுருக்கம் விழுந்து முதிய தோற்றம் ஏற்­ப­டுதல், தோல் புற்று நோய், காது கேளாமை, பல் சொத்தை, நெஞ்சில் சளி, எலும்பு முறிவு நோய், இதயக் கோளாறு, வயிற்­றுப்புண், விரல்­களில் நிறம் மாறுதல், சோரி­யாஸிஸ் என்னும் தோல் நோய், ஆணாக இருப்பின் விந்­த­ணுக்கள் குறைந்து குழந்தைப் பேற்­றின்மை, பெண்­ணாக இருப்பின் மலட்டுத் தன்மை கர்ப்­பப்பை புற்று நோய், போன்ற பல ஆபத்­தான நோய்கள் ஏற்­ப­டு­வ­தாக ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

வீண்-­ வி­ரயம்:

28 ரூபா பணத்­தைக்­கொண்டு எந்த விதத்­திலும் நன்­மை­ய­ளிக்­காத, தீமையைத் தரக் கூடிய சிக­ரெட்டொன்றை வாங்கி ஊதித் தள்­ளு­வ­தென்­பது வீண் விரயச் செல­வாகும்.

ஒரு சிக­ரெட்டின் விலை 28 ரூபா­வாயின் ஒருவன் சரா­ச­ரி­யாகக் குறைந்­தது ஒரு நாளைக்கு 5 சிகரெட் புகைப்­ப­தாக இருந்தால்..

ஒரு நாளைக்கு - 140 ரூபா

ஒரு வாரத்­துக்கு - 980 ரூபா

ஒரு மாதத்­திற்கு - 4,200 ரூபா

ஒரு வரு­டத்­திற்கு - 50,400 ரூபா

பத்து வரு­டங்­க­ளுக்கு - 504,000 ரூபா

இவ்­வா­றான வீண் விர­யங்­களைத் தவிர்ப்­ப­தனால் குடும்­பஸ்தர் ஒருவர் தனது பிள்­ளை­க­ளுக்கு நல்­ல­தொரு கல்­வியை வழங்கி அத­னூ­டாக அவர்­க­ளுக்கு சிறந்த எதிர்­கா­லத்தை வழங்­க­மு­டி­யு­மல்­லவா?

சிகரெட் புகைப்­பவர் விடும் புகை­யினால் அவர் பாதிப்­ப­டை­வ­துடன் அவரைச் சூழ­­வுள்­ள­வர்­களும் பாதிப்­பிற்­குள்­ளா­கின்­றனர். இதனால் சம்­பந்­தப்­பட்­டவர் பாதிக்­கப்­ப­டு­வதை விட அவர் விடும் புகையை சுவா­சிப்­பவர் அதிகம் பாதிக்­கப்­ப­டு­கிறார் என்று மருத்­து­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

நவீன மனிதன் ஆரோக்­கி­யத்தில் அலட்­சியம் காட்­டு­கிறான். அவ­னுக்கு எவ்­வ­ளவோ அருட்­கொ­டைகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவற்றில் ஒன்று உடல் நலம். உடல் நலத்தில் மனி­தர்­களில் பெரும்­பா­லானோர் அலட்­சி­ய­மா­கவே இருக்­கின்­றனர். உடல் நலத்தைப் பேணாமல் நோய்த்­தாக்­கத்­திற்கு உள்­ளா­னதன் பின்னர் அவற்­றி­லி­ருந்து குணம் பெற பற்­பல மருத்­துவ சிகிச்சைக­ளையும் அதற்­கான .முயற்­சி­க­ளையும் நாடி மருத்­து­வர்­க­ளிடம் விரை­கின்­றனர்.

புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போது கோது­மையை வாயில் போட்டு மெல்­லலாம், அல்­லது சூரிய காந்தி விதை­களை மெல்­லலாம், அல்­லது சூயிங்கம் போன்ற மாற்று ஏற்­பா­டு­களை கையாளும் போது புகை­யி­லையை விட்டும் முற்­றி­லு­மாக நம்மால் ஒதுங்க முடியும்.

புகை­யி­லையும், அது சார்ந்த பொருட்­களும் மனித சமூ­கத்­திற்கு எவ்­வி­தத்­திலும் பயன்­களைத் தரு­கின்ற பொருட்­க­ளல்ல. மாறாக மனித சமூ­கத்தை அழிக்­க­வல்­லவை என்­பதும் மேற்­கூ­றப்­பட்ட தக­வல்­க­ளி­லி­ருந்து தெளி­வாகத் தெரிந்து கொள்ள முடி­கின்­றது.

எனவே எமது அர­சாங்கம் தீவிர முயற்­சி­களை மேற்­கொண்டு புகை­யி­லை­யையும், அது­சார்ந்த பொருட்­க­ளையும் முற்­றி­லு­மாகத் தடை செய்­ய­வேண்டும்.

இவ்­வாறு கடு­மை­யான பாதிப்­புக்­களை உடல் ரீதி­யா­கவும் உள­வியல் ரீதி­யா­கவும் உங்­க­ளுக்கு ஏற்­ப­டுத்தும் இந்த புகைத்தல் பழக்கம் உங்­க­ளுக்கு தேவை தானா என்­பதை நீங்கள் தான் முடிவு செய்­து­கொள்ள வேண்டும்.

நீங்கள் புகைப்­பி­டிக்கும் பழக்கம் உள்ள ஒரு­வ­ராயின், நான் புகைத்­த­லுக்கு அடிமையாகி விட்டேனே என்றோ, என்னால் இத்தீய பழக்கத்தை கைவிட முடியுமா அல்லது முடியவில்லை என்றோ வீணாக மனதை போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

மாற்றம் குறித்த சிந்தனையையும், அச்சிந்தனையின் வழியாக உலகில் மாற்றத்தையும் கொண்டு வரக் கூடிய ஆற்றல் மனிதர்களிடம் மாத்திரமே இருக்கின்றது.

எனவே, நீங்கள் நினைத்தால் இத்­தீய புகைப்­ப­ழக்­கத்தை கைவிட முடியும். ஒவ்­வொரு முறையும் சிக­ரெட்­டுக்கு வைக்கும் நெருப்பு உங்கள் வாழ்க்­கைக்கும் சேர்த்தே வைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றது என்­பதை ஒரு நாளும் மறந்து விடாதீர்கள்.

மன திடகாத்திரத்துடன் ஒரு முடிவுக்கு வாருங்கள். இன்றே, இப்பொழுதே, இந்நொடியிலேயே இந்தப் பத்தியை வாசித்து முடியும் இத்தருணமே என்னால் புகைக்காமல் இருக்க முடியும் என உறுதி கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் முடியும்.

எப்.ப(f)ஸ்னா
Share |

Show commentsOpen link

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts