Tuesday, October 8, 2013

ஆதார் அட்டை கட்டாயம் தேவை என்று அரசு சொல்லக்கூடாது adhar card is not nessasary

ஆதார் அட்டை கட்டாயம் தேவை என்று அரசு சொல்லக்கூடாது ; கோர்ட்
by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today, 16:39

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆதார் அட்டை திட்டம் முழுமையாக அனைவருக்கும் வழங்காத பட்சத்தில் பொதுமக்களை கட்டாயம் என்று சிரமப்படுத்தக்கூடாது என்று அறிவித்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உறுதியாக உள்ளது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் அருணா ராய் உள்பட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படாது என்று கோர்ட் உறுதி அளித்தது. மத்திய அரசும் அதனை ஏற்று கொண்டது. ஆனால் இந்த அட்டை தொடர்பாக சிறிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம் என்று மத்திய அரசும், மத்திய எண்ணெய் , காஸ் உள்ளிட்ட பொது துறை நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை வைத்தனர். ஆனால் நீதிபதிகள் இதனை ஏற்க இன்று மறுத்து விட்டனர்.

அதாவது ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மானியம் சரியான நபருக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் அட்டை அவசியம் என்று கருதுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

யாரும் பாதிக்கக்கூடாது :

இதற்கு நீதிபதிகள் அளித்த பதிலில்; ஆதார் அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கி முடிப்பதற்கு பல ஆண்டுகள் காலம் பிடிக்கும். பலரும் பெறாமல் இருக்கும் இந்த நேரத்தில் ஆதார் அட்டையை அரசு எந்தவொரு விஷயத்திற்கும் கட்டாயம் என்று அறிவிக்க கூடாது. அத்தியாவசிய தேவைகளை பெறுவதில் இந்த கார்டு இல்லை என்பதால் யாரும் பாதிக்கக்கூடாது என்பது கோர்ட் கருதுகிறது என்று தெரிவித்தனர். கோர்ட் தனது உத்தரவில் மாறாது என்றும் தெரிவித்தனர். அவசர வழக்காக வேண்டுமானால் விசாரிக்க தயார் என்று நீதிபதிகள் ஏற்று கொண்டனர்.

குளறுபடிகள் நடக்க வாய்ப்பு : மனுதாரர் தரப்பில் , ஏற்கனவே பல்வேறு மோசடிகள், பயங்கரவாதிகள் பிரச்சனை இருக்கும்போது தனியார் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்றும், இதில் குளறுபடிகள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கோர்ட்டில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

பல ஆயிரம் கோடிகளை விழுங்கியது:

பல ஆயிரம் கோடி செலவில் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கென பல மைங்களில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஆதார் அடையாள அட்டை வாங்க பலரும் பல மாதிரியான சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக அடையாள அட்டைக்கு பதிவு செய்ய செல்லும்போதே உங்களிடம் ரேசன்கார்டு இருக்கிறதா, வாக்காளர் அட்டை இருக்கிறதா, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒப்புகை சீட்டு இருக்கிறதா , தற்போது எந்த முகவரியில் இருக்கிறீர்கள், இப்படி பல கேள்விகள் கேட்டு பலரும் அவதிக்குள்ளாயினர். மேலும் இதற்கான புகைப்படம் எடுக்கும் நேரத்தில் கடும் கூட்டத்தில் பலரும் சிரமப்பட்டு வந்தனர். இந்த ஆதார் அடையாள அட்டையின் முக்கிய நோக்கம் என்ன, எதற்கு இதனை பயன்படுத்தலாம், இந்த இடங்களில் இதற்கான முக்கியத்துவம் உண்டு என்று எந்தவொரு அதிகாரப்பூர்வ தெளிவான அறிவிப்பை வெளியிடாமல் மத்திய அரசு இருந்து வந்தது. இதற்கிடையில சில மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தது. தமிழக அரசை பொறுத்தவரையில் தாங்களும் ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்கிறோம் என அது ஒரு பக்கம் புகைப்படம் எடுக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது.

ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் : இதற்கிடையில் ஆதார் அடையாள அட்டை ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதாவிற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

The post ஆதார் அட்டை கட்டாயம் தேவை என்று அரசு சொல்லக்கூடாது ; கோர்ட் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts