Saturday, January 4, 2014

ஆற்று மணல் கடுமையான தட்டுப்பாடு: சென்னையில் கட்டுமான பணிகள் பெருமளவில் பாதிப்பு River sand acute shortage impact of large scale construction projects in Chennai

Img ஆற்று மணல் கடுமையான தட்டுப்பாடு: சென்னையில் கட்டுமான பணிகள் பெருமளவில் பாதிப்பு River sand acute shortage impact of large scale construction projects in Chennai

சென்னை, ஜன.5-

மணல் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் கட்டுமான பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர்.

தமிழகத்தில் ஆறுகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதை தவிர்க்க ஆங்காங்கே அரசே மணல் குவாரிகள் அமைத்து மணல் விற்பனை செய்ய முடிவு செய்தது. இதன்மூலம் திருட்டு மணல் கொண்டு செல்லப்படுவது தவிர்க்கப்பட்டது.

சென்னை நகரை பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு 7 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது. ஆனால் 1500 லோடு வரைதான் மணல் கிடைத்து வந்தது. தற்போது அந்த மணலும் கிடைக்காமல் கட்டுமான பணிகள் முழுவதும் முடங்கி கிடக்கிறது.

தற்போது ஆற்று மணல் விலை ஒரு யூனிட் ரூ.8 ஆயிரம் என ஒரு லாரி மணல் விலை ரூ.24 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வளவு விலைக்கு மணல் கிடைத்தாலும், அந்த மணலும் எல்லாருக்கும் பரவலாக கிடைப்பதில்லை. காரணம் சென்னையில் மட்டும் 25 ஆயிரம் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இதனால் கட்டுமான பணிகளும் முடங்கிவிடும் நிலையில் உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் குவாரியை அரசு தடை செய்த பிறகு காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தை அடுத்த பழைய சீவரம் மணல் சேமிப்பு மையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மணலும், மதுராந்தகம் அருகே கல்லபிராண்புரம் என்ற இடத்தில் இருந்து கொண்டுவரப்படும் மணலும் தான் தற்போது சென்னை மாநகர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.

தற்போது அந்த பகுதிகளிலும் மணல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மணல் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக சென்னையில் கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. வெளிமாநிலத்தில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் தமிழகத்திற்கு வந்து கட்டுமான தொழிலையே நம்பியிருக்கின்றனர்.

தற்போது அவர்கள் அனைவரும் வேலை இல்லாமல் கிடைக்கும் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடி வருபவர்களுக்கு இது போன்று வேலை இல்லை என்றால், அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புண்டு.

பெரிய அளவிலான கட்டுமான பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகின்றன. காரணம் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணி முடித்து தர வேண்டும் என்பதால் மணல் விலை எவ்வளவாக இருந்தாலும் வாங்கி அவர்கள் பணியை முடிக்கின்றனர்.

தற்போது பொதுப்பணித்துறை மணல் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களில் ஒரு சில வாரங்களில் மணல் குவாரிகள் அமைக்க திட்டமிட்டுள்ளது. இவை விரைவாக அமைக்கப்பட்டால், மணல் தட்டுப்பாட்டை குறைப்பதற்கும், அரசு கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.

தங்கு தடையின்றி கட்டுமானங்களுக்கு மணல் கிடைக்க வேண்டும் என்பதும், அரசே நேரடியாக மணலை உரிய விலையில் வழங்க வேண்டும் என்பதும் தான் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
...

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts