Saturday, October 12, 2013

டெங்குவை குணப்படுத்தும் ஆட்டுப்பால் goat milk is best for dengue

டெங்குவை குணப்படுத்தும் ஆட்டுப்பால்

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,

புதுடெல்லி: அண்ணல் காந்தி குடித்ததெல்லாம்… ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலுங்க… இது பிரபல தமிழ் சினிமா பாடல் வரி. இந்த வரியை மெய்ப்பிக்கும் வகையில் டெல்லி மக்கள் இப்போது ஆட்டுப்பாலை விரும்பி குடிக்கின்றனர். மருத்துவ குணம் அதிகம் கொண்ட ஆட்டுபாலை குடித்தால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம் என்கின்றனர் டெல்லிவாசிகள். டெல்லியில் கடந்த ஜூலை மாதம் பருவமழை தொடங்கியது. இதனால் அவ்வப்போது மழை கொட்டி தீர்த்தது. கனமழை பெய்ததால் சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. குளம் போல் தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியானதால், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கிழக்கு டெல்லி பகுதியில் கடந்த மாதம் 30ம் தேதி வரை 435 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இப்போது இந்த எண்ணிக்கை 617ஆக உயர்ந்துள்ளது. டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  இந்நிலையில் மருத்துவ குணம் கொண்ட ஆட்டுப்பால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் டெல்லியில் ஆட்டுப்பால் விற்பனை சூடுபிடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு லிட்டர் வெள்ளாட்டு பால் 400க்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னர், விலை இருமடங்காகி 800க்கு விற்பனையானது. இப்போது ஒரு லிட்டர் ஆட்டுப்பால் 2500க்கு விற்பனையாகிறது.  அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆட்டுப்பாலுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது. இதனால் இறைச்சி கூடங்களுக்கு ஆடுகள் கொண்டு செல்லப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திரிலோக்புரியில் உள்ள சிறுபான்மையினர் மேம்பாட்டு மையத்தின் தன்னார்வலர் சாந்தினி கூறுகையில், 'ஆட்டுப்பாலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது. இதனால் இந்த பாலை அருந்தும் போது டெங்கு காய்ச்சலை பரவாமல் தடுக்க முடியும். பப்பாளி இலையும் டெங்கு காய்ச்சல் குணமாக்கும்' என்றார். அதே பகுதியை சேர்ந்த தீபக் குமார் கூறியதாவது: 100 மில்லி லிட்டர் ஆட்டுப்பால் 400க்கு விற்பனை செய்யப்படுகிறது. மயூர் விகார் பகுதி&1, பட்பர்கான்ஜ், கணேஷ் நகர் மற்றும் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து போட்டி போட்டுக் கொண்டு மக்கள் ஆட்டுப்பாலை வாங்கி செல்கின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

The post டெங்குவை குணப்படுத்தும் ஆட்டுப்பால் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts