Sunday, October 6, 2013

ஆண்களும் , பெண்களும் அப்படி என்ன தான் பேசுகிறார்கள் பேஸ்புக்கில் !! Facebook girls and boys news

ஆண்களும் , பெண்களும் அப்படி என்ன தான் பேசுகிறார்கள் பேஸ்புக்கில் !!

by adminTamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

சமூக வலை என்ற ஒன்று உருவான பின்னர் அங்கு நடக்கும் கூத்துக்களும், உரையாடல்களையும் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்குமளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. அதே வேளையில் நாள் முழுவதும் சமூக வலையில் நேரம் தொலைக்கும் பலர் அப்படி அங்கு என்ன தான் பேசுகிறார்கள் என்ற கேள்வியும் சிலரின் மண்டையைக் குடைய ஆரம்பித்துள்ளது .

இப்படியான கேள்விகள் எழுந்ததால் தானோ என்னவோ , அமெரிக்கா இதையும் விட்டு வைக்காமல் இதிலும் ஆராய்ச்சி  செய்யத் தொடங்கி விட்டது. புதிய அமெரிக்க ஆய்வின் படி பேஸ்புக்கினை அதிகம் பயன்படுத்தும் ஆண்களும் , பெண்களும் தங்களின் தற்போதைய நிலையை பகிர்ந்து கொள்ள 700 மில்லியனுக்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான வார்த்தைகள், சொற்றொடர்கள் மற்றும் தலைப்புக்களையே பயன்படுத்துகின்றனர் என்பது தெரிய வருகிறது.

இந்த ஆய்விற்காக பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  உளவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் சுமார் 75,000 அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் நிலைமையைப் பகிர்ந்து கொள்ள பயன்படுத்தும் வார்த்தைகளை அவர்களின் செக்ஸ், வயது, மற்றும் எண்ணங்கள் போன்றான பல்வேறு ஆளுமை வகைகளின் படி வேறுபடுத்திப் பார்த்து சிலவற்றைக் கண்டுபிடித்துள்ளனராம்.

இந்தக் கண்டுபிடிப்புக்களின் படி பார்த்தால் ஆண்கள் விளையாட்டு, வீடியோ கேம்ஸ் மற்றும் அரசியலில் அதிக கவனம் செலுத்துவதாகவும் பெண்கள் எப்போதும் தங்களின் தலைமுடி , அழகு மற்றும் ஷாப்பிங் சமாச்சாரங்கள் குறித்து அதிகம் கதைப்பதாகவும் தெரிகிறது.

அழகு சாதனப் பொருட்களை விற்று வரும் கனடாவில் உள்ள நம் வர்த்தகர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி  பேஸ்புக் மூலமாக குறிப்பாக குருவி போன்ற தமிழ் மக்கள் அதிகம் வந்து குவியும் இணையதளங்களில் உங்களை விற்பனைப் பொருட்களை விளம்பரம் செய்து கொள்ளலாம்.

இது மட்டுமல்லாமல் பெண்கள் அதிகம் பேஸ்புக்கில் முணுமுணுக்கும் விடயம் தங்கள் கணவன் அல்லது காதலன் பற்றியதாகத்தான் உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. பொதுவாக பிறரை அதிகம் திட்டுவதையும் , வசை பாடுவதையும் பேஸ்புக்கில் ஆண்கள் பலர் தங்கள் வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

பேஸ்புக் பயன்படுத்தும் இளையோர்கள் அதிகமாக அவர்களுடைய பாடசாலை அல்லது பிரபல அறிவியல் செய்திகளைப் பேச , குடும்பங்கள் பற்றி பேசுவதில் அக்கறை செளுத்துகின்றனறாம். மிகக் குறைவான வீதத்தினர் மட்டுமே தங்கள் வேலை, பீர் மற்றும் திருமணங்கள் பற்றி பேஸ்புக்கில் பேசுகின்றனர் என்பதும் இந்த ஆராயச்சியில் வெளி வந்துள்ள விடயங்கள்.

காலங்காலமாக தொன்று தொட்டு பெண்கள் ஒன்றாக கூடும் இடங்களில் அழகு பற்றிய சமாச்சாரங்களைப் பேசுவதும், ஆண்கள் அரசியல் பேசுவதும் அனைவரும் அறிந்த ஒன்றுதானே. இதற்கு ஒரு  ஆராய்ச்சி தேவையா என்பது தான் குருவியாரின் கேள்வி. பேசாமல் அமெரிக்கா இது போன்ற ஆராயச்சிக்குப் பதிலாக பேஸ்புக்கில் பெண் போர்வையில் ஒளிந்துள்ள ஆண்கள் எத்தனை, ஆண் போர்வையில் ஒளிந்துள்ள பெண்கள் எத்தனை பேர் என்ற ஆராய்ச்சியில் இறங்கியிருந்தால் போலிகளை கண்டுபிடிக்க உதவியாக இருந்திருக்கும்.

The post ஆண்களும் , பெண்களும் அப்படி என்ன தான் பேசுகிறார்கள் பேஸ்புக்கில் !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts