Thursday, October 10, 2013

கமல்ஹாசன்- kamala hasan special report

கமல்ஹாசன்- கடவுளா?? மிருகமா???

by thenuraj
New Tamil

இந்திய சினிமா வரலாற்றில் கமல்ஹாசன் என்ற ஒரு நடிகருக்கு தவிர்க்க முடியாத இடம் ஒன்று உள்ளது. தமிழ் ரசிகனின் ரசனையை வேறு தளத்துக்கு எடுத்து சென்றதில், சென்றுகொண்டு இருபதில் கமல் மாதிரி ஒரு கலைஞனை இது வரை நான் கண்டது இல்லை. SMS படத்துல சந்தானம் சொல்லற மாதிரி "நல்லவங்க கருத்து ரீச் ஆகும், ஆனா என்ன கொஞ்சம் லேட்டா ரீச் ஆகும்"..... கமல் படம் கண்டிப்பா மக்களை ரீச் ஆகும், என்ன ரொம்ப ரொம்ப லேட்டா KTV முலமா ரீச் ஆகும். அன்பே சிவம், குணா போன்ற படங்களை லேட் ரீச்க்கு நல்ல உதாரணமாக சொல்லாம்.

KTVயில ஓடுன நாட்கள் கூட இந்த படங்கள் தியேட்டரில் ஓடவில்லை. ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் போல நல்ல திரைப்படங்கள் தர வேண்டும் என்ற எண்ணத்தை கமல் ஒருபொழுதும் மாற்றி கொண்டதே இல்லை. சினிமாவில் சம்பாரித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்யும் சில மனிதர்களில் கமலும் ஒருவர். கமல் அளவுக்கு எந்த நடிகருக்கும் படங்கள் ப்ளாப் ஆனது கிடையாது. மாபெரும் பொருட்செலவில் கமல் எடுத்த சில படங்கள் அதள பாதாளத்தில் விழுந்து உள்ளன உ.தா: ஆளவந்தான். சில படங்கள் வெறும் ரெண்டே நாள் மட்டும் ஓடி வரலாற்று சாதனை புரிந்து உள்ளன. உ.தா: மும்பை எக்ஸ்பிரஸ்.இப்படியாக நிறைய நல்ல/கெட்ட விஷயங்கள் கமலை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.


கமல் செய்யாத சாதனைகளே கிடையாது. சில சாதனைகள் இதோ:

• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார். விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.

• இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.

• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

• கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.

• கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.

• கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது.தான் சினிமாவில் சம்பாத்திதை சினிமாவிலே முதலீடு செய்யும் ஒரு சிலரில் கமலும் ஒருவர்.

• இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.

• 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று சாதனை புரிந்தவர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.

• சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

இவ்வளவு சாதனைகள் நிகழ்த்திய பிறகும், இத்தனை விருதுகள் வாங்கி குவித்த பிறகும் இணையத்தில் கமல் மீது நிறைய குற்றச்சாற்று வைக்க படுவதை பார்கிறேன். அவர் பாமர ரசிகனுக்கு புரியாத மாதிரி படம் எடுக்கிறார் என்பது முதல் குற்றச்சாற்று. ஹே ராம்: புரியாத படத்திற்கு நல்ல உதாரணம். அப்புறம் ஆங்கில படங்களில் இருந்து காப்பி அடிக்கிறார் என்று. கமல் காப்பி அடிப்பதை எப்பொழுதும் மறுத்ததும் கிடையாது, அதை ஆமோதித்ததும் கிடையாது. அவர் காப்பி அடித்தது/தழுவி எடுத்த என்று சொல்லப்படுகிற சில படங்களை பற்றி கீழே குடுத்து உள்ளேன். கமல் தன் கலை பயணத்தில் ஆங்கில படங்களை தழுவி தமிழில் எடுத்த படங்கள் இதோ:

Witness (1985) : Indiana Jones புகழ் ஹாரிசன் ஃபோர்டு நடித்த இந்த படத்தில் ஒரு கொலை நடந்து விடும், அந்த கொலைக்கு சாட்சி 8 வயது சிறுவன். ஹீரோ ஃபோர்டு போலீஸ் அதிகாரி. சிறுவனின் சாட்சியை வைத்து ஃபோர்டு கொலையாளியை பிடிப்பது தான் படத்தின் கதை. படம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

இதே போன்ற ப்ளாட் கொண்ட படம் சூரசம்ஹாரம். கமல் இதில் போலீஸ் ஆக நடித்து இருப்பார். நிழல்கள் ரவியின் கொலையை நேரில் பார்த்த சாட்சி ஒரு சிறுவன். அந்த சிறுவனின் உதவியால் கமல் கொலைகாரர்களை பிடிக்கும் படி கதை அமைக்க பட்டு இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த கமல் படங்களில் இதுவும் ஒன்று. வெளியான ஆண்டு 1988.

She-Devil (1989) : குண்டாய் இருக்கும் மாணவி, வழி தவறி வேறு ஒரு பெண்ணின் பின்னல் போகும் தன் கணவனை பழிக்கு பழி வாங்குவது தான் கதை.

சதிலீலாவதி She-Devil-ளின் தழுவல் என்று சொல்லலாம். இந்த படத்தில் கமலின் ஆஸ்தான செகண்ட் ஹீரோ ரமேஷ் அரவிந்த் நடித்து இருப்பார். குண்டாய் இருக்கும் கதாநாயகி கல்பனா, வழி தவறி போகும் தன் கணவனை தன் வழிக்கு கொண்டு வருவது தான் சதிலீலாவதி. கமல் இதில் கோவை சரளாவுடன் நடித்து புரட்சி செய்து இருப்பார். படம் வெளியான ஆண்டு 1995.

The Bachelor (1999): ஹீரோ கல்யாணமே வேண்டாம் என்று இருக்கும் ஒரு பிரம்மச்சாரி, தன் தாத்தாவின் $100 மில்லியன் சொத்தை அடைய வேண்டும் என்றால் தனது 30 ஆவது பிறந்தநாளில் மாலை 6:05 மணிக்குள் திருமணம் செய்து இருக்க வேண்டும். ஹீரோவின் 30 ஆவது பிறந்த நாள் நாளை மறுநாள். ஹீரோவிடம் இருப்பதோ ஒரே நாள், இந்த ஒரு நாளில் அவன் தன் முன்னாள் காதலியை கை பிடித்தானா என்பதை மிகவும் நகைச்சுவை உடன் சொன்ன படம் தான் The Bachelor.

இதே போன்ற கதை அமைப்பு கொண்ட படம் "பம்மல் கே. சம்பந்தம்-(2002). தன் தாத்தாவின் மேன்ஷன் கமலுக்கு வர வேண்டும் என்றால் குறிபிட்ட நேரத்துக்குள் கமல் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். இந்த கான்செப்ட்-ஐ மட்டும் எடுத்து கொண்டு கமல் குடுத்த படம் தான் பம்மல் கே. மௌலி இதை டைரக்ட் செய்து இருப்பார்.

Nine to Five (1980) : முன்று கதாநாயகிகள் சப்ஜெக்ட். அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தின் மேனேஜர் ஒரு சபலிஸ்ட். தனக்கு கீழே வேலை செய்யும் பெண் ஊழியர்கள்யிடம் தவறாக நடக்க முயற்சி செய்பவன். தனக்கு ஒத்துழைப்பு அளிக்காத பெண் ஊழியர்களை காரணமே இல்லாமல் வேலையை விட்டு நீக்கி விடுவான். முன்று கதாநாயகிகள் ஒன்று சேர்ந்து சபலிஸ்ட் மேனேஜர் குடுக்கும் செக்ஷுவல் தொல்லைகளில் இருந்து தப்பித்து தங்கள் அலுவலகத்தில் உள்ள மற்ற பெண்களையும் எப்படி காப்ற்றுகிறார்கள் என்பதை மிகவும் நகைச்சுவை உடன் சொன்ன படம் தான் Nine to Five.

இதே கதையை கொண்டு கமல் தயாரித்த படம் தான் "மகளிர் மட்டும்". ரேவதி, ஊர்வசி, மற்றும் ரோகினி கதாநாயகிகளாக நடித்த இந்த படத்தில் நாசர் சபலிஸ்ட் மேனேஜர் ஆக நடித்து இருப்பார். கமல் கெஸ்ட் ரோல் வேறு செய்து இருப்பார். படம் வெளி வந்த ஆண்டு 1994.


Show commentsOpen link

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts