Friday, October 18, 2013

இன்று அதிகாலை சந்திரகிரகணம் Today morning chandra kiraganam

இன்று அதிகாலை சந்திரகிரகணம் Today morning chandra kiraganam

சென்னை, அக்.19-

இன்று (சனிக்கிழமை) சந்திரகிரகணம் அதிகாலை 3.20 மணியில் இருந்து காலை 7.20 மணி வரை நடந்தது.

சந்திரகிரகணம் குறித்து பிர்லா கோளரங்க அதிகாரிகள் கூறியதாவது:-

வானில் நிகழக்கூடிய மாற்றங்களில் சூரிய கிரகணம், சந்திரகிரணம் ஆகியவை அடிக்கடி நிகழக்கூடியவை ஆகும். பெரும்பாலான சமயங்களில் இந்த கிரகணங்களை எல்லா நாடுகளிலும் காண முடிகிறது. சில சமயங்களில் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் காணலாம்.

சந்திரகிரகணம் 'கருநிழல் சந்திரகிரகணம்', 'புறநிழல் சந்திரகிரகணம்' என இருவகைப்படும். பெரும்பாலும் புற நிழல் சந்திரகிரகணம்தான் நிகழ்கிறது. எப்போதாவதுதான் கருநிழல் சந்திரகிரகணம் வருகிறது. பூமியின் நிழல் சந்திரனை கடந்து செல்லும்போது சந்திரன் முழுமையாக மறைந்துவிடுகிறது. இது புறநிழல் சந்திரகிரகணம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இதுவே நிகழும்.

அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) நிகழவிருப்பதும் புறநிழல் சந்திரகிரகணம்தான். இது இன்று அதிகாலை 3.20 மணியில் இருந்து காலை 7.20 மணி வரை இருந்தது. உச்சகட்டமாக அதிகாலை 5.20 மணிக்கு நிகழ்ந்தது.

நம்நாட்டில் இந்த சமயத்தில் சூரிய உதயம் தொடங்கிவிடுவதால், சந்திரகிரகணத்தை பார்க்க வாய்ப்பு இல்லை. ஆஸ்திரேலியா, சைபீரியா ஆகிய நாடுகள் தவிர மற்ற நாடுகளில் இந்த சந்திரகிரகணம் தெரியும்.

இவ்வாறு பிர்லா கோளரங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிரகணத்தின்போது, பொதுவாக கோவில்களில் பூஜைகள் செய்வதும் நடை அடைப்பதும் உண்டு. ஆனால் இந்த புறநிழல் சந்திரகிரகணம் என்பதால் கோவில் நடை அடைக்க தேவையில்லை. பூஜைக்கும் தடை இல்லை என்று ஜோதிடர் பாலு சரவணசர்மா தெரிவித்தார்.

இந்த வருடத்தின் கடைசி சந்திரகிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

...

shared via

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts