Saturday, September 7, 2013

பேஸ்புக்கில் குறைபாடு கண்டுபிடித்த தமிழக இன்ஜினியர் அருள்குமார் facebook fault by arulkumar tamilan

பேஸ்புக்கில்
குறைபாடு கண்டுபிடித்த தமிழக
இன்ஜினியருக்கு கருணாநிதி,
ஸ்டாலின் வாழ்த்து
பேஸ்புக்
குறைபாடுகளை கண்டுபிடித்து உலக
சாதனை புரிந்த தமிழக இன்ஜினியர்
அருள்குமாருக்கு கருணாநிதி,
மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தனர்.
பேஸ்புக் இணையதளத்தில் உள்ள
குறைபாடுகளை கண்டறிந்து சேலம்
மாவட்டம் ஆத்தூர் கந்தசாமிபுதூர்
கிராமத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங்
பட்டதாரி அருள்குமார் (வயது 21) உலக
சாதனை புரிந்துள்ளார். இதற்காக
பேஸ்புக் இணையதளம் ஸீ8 லட்சத்து 12,500
பரிசாக வழங்கியது.
பரிசு பெற்ற அருள்குமார்
நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார்.
திமுக தலைவர் கருணாநிதி,
பொருளாளர் மு.க.ஸ்டாலின்
ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.
அவருக்கு அவர்கள்
வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது திமுக மாணவர்
அணி செயலாளர் இள புகழேந்தி,
துணை செயலாளர் பூவை ஜெரால்டு,
சேலம் மாவட்ட அமைப்பாளர் தமிழ்,
ஆத்தூர் நகர மாணவர் அணி அமைப்பாளர்
பரகத் அலி உடன் இருந்தனர்.

சுதந்திர தீ freedom fire

சிகரெட்டை பற்ற வைத்தவரை தேசியவாதியாக கொண்டாடும் இந்த நாட்டில்...

சுதந்திர தீயை பற்றவைத்தவர் என்றும் தீவிரவாதி தான்...!

சுகப்பிரசவத்திற்கு தேவை சரியான எடையும், உடல் உழைப்பும்

தமிழ்ச் சமுதாயம்  -  தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி:
சுகப்பிரசவத்திற்கு தேவை சரியான எடையும், உடல் உழைப்பும்

சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும்.

பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும்.

மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்.

கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம்.

இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும்.

அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அளவைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது

Friday, September 6, 2013

சாப்பிட 12 விதிமுறைகள் Message from தமிழால் இணைவோம் Rules for eating

தமிழால் இணைவோம்:
சாப்பிட 12 விதிமுறைகள்

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.

2.எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

3.தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம்.

4.சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதிங்க.

5.அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.

6.பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.

7.பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.

8.ஆரோக்கிய உணவுகளை சிலர் பிடிக்காமல் வைத்துவிடுவாங்க.. அப்படிசெய்யாமல் சாப்பிட பழகவும்.

9.இரவு உணவில் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்

10.சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.

11.சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.

12.சாப்பிடும் முன்பும் பின்பும் நன்றி சொல்ல மறக்காதிங்க.

-Manivalluvar Mani

Visit our Page -► தமிழால் இணைவோம்

Thursday, September 5, 2013

திமுக ஒரு குடும்ப அரசியல் கட்சி... dmk family politics

வாரிசு என்று இருந்தால்
அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள்...
-ஸ்டாலின்...
\\ இது சாதரண வார்த்தைகள் அல்ல...
திமுக தொண்டர்களின் முதுகில்
குத்தும் வார்த்தைகள்... //
திமுகாவில் இணையும் , இணைந்துள்ள
நண்பர்களின் ஆழ்ந்த கவனத்திற்கு :-
** வாங்க ஒரு குட்டி சர்வே எடுப்போம்...
**
கருணாநிதியின் குடும்பம் மிக
பெரியது...
அதில் - ஸ்டாலின் , அழகிரி , கனிமொழி,
மாறன் சகோதரர்கள்... எல்லோருக்கும்
ஆட்சி அதிகாரத்தில் குறுக்கு வழியில்
பதவி....
இவர்கள் என்ன கடும் வெயிலில்
கட்சி கொடி பிடித்து ரோட்டில்
அலைந்தார்களா ???
இல்லை கட்சியை வளர்க ஊர் ஊராக
சென்று தொண்டை தண்ணி வற்ற வற்ற
கத்தினார்களா ??? இல்லையே ????
ஆனால், திமுக
தொண்டர்களுக்கு கடைசி வரை கட்சி க
நெஞ்சில் மட்டுமே பதவி... (அதுவும்
பெயருக்கு மட்டுமே)
நாளை - ஸ்டாலின் மகன், அழகிரி மகன் ,
கனிமொழி மகன் , மாறன் மகன்கள்
என்று அரசியலுக்கு வருவார்கள்..
உடனடியாக
அவர்களுக்கு பதவி கிடைக்கும்...
அடுத்து - இவர்கள் சந்ததிகள்
அரசியலுக்கு வருவார்கள்...
அவர்களுக்கு பதவி கிடைக்கும்..
அதே போல - அந்தந்த மாவட்டங்களிலும்
அதே வாரிசு அரசியல்
தானே திமுகாவில் நடக்கிறது ???
// எடுத்து காட்டுக்கு - சேலம் வீர
பாண்டி ஆறுமுகம்
அடுத்து அவரது மகன்
தானே வேட்டியை மடித்து கொண்டு இ
இது எல்லாம் இல்லை , பச்சை பொய்
என்று உங்கள் நெஞ்சில்
கை வைத்து சொல்லுங்கள் பாப்போம்...
காலமெல்லாம், என்ன தான் திமுகாவில்
உழைத்தாலும் , நிர்வாக திறமைகள்
இருந்தாலும், உங்களை வளரவும் விட
மாட்டார்கள், நீங்கள் வளரவும்
முடியாது...
கடைசி வரை அவர்கள் போடும்,
ரொட்டி துண்டுக்கு வாலாட்டி கொண்ட
வேண்டியது தான்...
உண்மையாலும், திமுகாவில் உள்ளவர்கள்
தான் - உண்மையான அடிமைகள்.....
திறமை இருந்தாலும் - அடிமட்ட
தொண்டன் அவன் சாகும் வரை,
தொண்டனாகவே தான் இருக்கமுடியும்.
.. காரணம் இது ஒரு குடும்ப அரசியல்
கட்சி...
ஏமாறாதே ஏமாறாதே...

ஆசிரியர் அப்துல் மாலிக் Abdul maalik

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் மாலிக் என்ற இந்த ஆசிரியர் தினந்தோறும் ஆற்றில் இறங்கி டியூப் மூலம் கரையை கடந்து, பள்ளிக்கு சென்று பாடம் நடத்துகிறார்.

பஸ் மூலம் சென்றால் 3 மணி நேரம் ஆகும் என்று ஆற்றின் வழியாக 15 நிமடத்தில் பள்ளிக்கு சென்று பாடம் எடுக்கிறார்.

இன்று அவர் ஆற்றை கடந்து பள்ளிக்கு சென்ற போது ஏரளமான மாணவர்கள் வாழ்த்து அட்டையுடன் காத்திருந்து அவருக்கு அசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஜாஹாங்கீர் என்ற ஏழு வயது மாணவனிடம் பெரியவனாகி என்னவாவாய் என்று கேட்டதற்கு 'மாலிக் சார்' மாதிரி ஆசிரியர் ஆவேன் என்று கூறியுள்ளான்.

இன்று ஒரு சில ஆசிரியர்கள் காலையில் பள்ளிக்கு சென்று கையெழுத்து போட்டதோடு சரி பிறகு எங்கு போனார் என்று யாருக்குமே தெரியாது,ஒரு சில ஆசிரியர்கள் 12 மணிக்கு மேல் தான் பள்ளிக்கே வருவர்.இப்படிப்பட்ட ஆசிரியர்களிடையே அப்துல் மாலிக்கின் சேவையை பாராட்டத் தான் வேண்டும்.

-Ilayaraja Dentist

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் happy teachers day

தமிழால் இணைவோம்:
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் ஒருமுறை இடைத்தேர்வில் ஆங்கில வினாத்தாள் மிக கடுமையாக தயாரிக்கப்பட்டிருந்தது , என் வகுப்பில் நன்றாக படிக்கும் ஒரு சில மாணவர்களை தவிர கிட்டத்தட்ட நாற்ப்பதிற்கும் மேற்ப்பட்டோர் தோல்வி அடைந்தனர்.

அதனால் எங்கள் வகுப்பு ஆசிரியர் இவ்வளவு பேர் தோல்வி அடைந்திருந்ததால் நம் வகுப்பிற்கு கெட்ட பெயர் வரும், ஆகவே எல்லோருக்கும் நான் முப்பது மதிப்பெண் அதிகம் வழங்குகிறேன் அனைவரும் தேர்ச்சி அடைந்து விடுங்கள் என்று சொல்லி மதிப்பெண்ணையும் வழங்கி விடைத்தாளை அனைவருக்கும் அளித்துக் கொண்டிருந்தார் .

அப்போது ஒரு மாணவனை மட்டும் அழைத்து அடி பின்னி எடுத்துக்கொண்டு இருந்தார் ( இது நானல்ல ) " ஏண்டா 30 மார்க் அதிகமா போட்டும் நீ பாஸ் ஆகலையே " ன்னு அடித்தார். அவன் வந்த பிறகு எவ்வளவு மதிப்பெண் என்று விசாரித்தால் 2 மார்க் எடுத்திருக்கிறான் , அதுவும் ஆசிரியராக பார்த்து போட்ட மதிப்பெண்னாம் அவன் ஒன்றுமே எழுத வில்லையாம் வகுப்பே விழுந்து விழுந்து சிரித்தது அது எனக்கு பள்ளி நாட்களில் மறக்க முடியாத அனுபவமாகும் ,

அதேபோல தனது சுற்றுலா அனுபவங்களை எல்லாம் சுவாரஸ்யமாக சொல்லி எனக்கு உலக அறிவை ஊட்டிய வேலுச்சாமி ஆசிரியரையும் என்னால் மறக்க முடியாது , நான் அடிவாங்காத ஆசிரியரே பள்ளியில் இல்லை எனலாம் அந்த அளவிற்கு அடி வாங்கி இருக்கிறேன் அவர்கள் அடித்த ஒவ்வொரு அடியும் என்னை வடிவமைப்பதர்க்காகத் தான் என்பதை மறுப்பதற்கில்லை .

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

என்பது போல ஏழைக்கு மட்டுமல்ல எழுத்தறிவித்தலே கோடிபுண்ணியம் உடையது

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

நன்றி - Dappa Thalaiyan

Visit our Page -► தமிழால் இணைவோம்

Wednesday, September 4, 2013

சத்துணவு திட்டம் எம்ஜிஆர் MGR

தமிழால் இணைவோம்:
சத்துணவு திட்டத்தை ஆரம்பிக்கும்போது முதலமைச்சர் எம்ஜிஆருக்கு எதிராய் விதவிதமாக கடுமையான விமர்சனங்கள்.

எம்ஜிஆரிடம் நெருக்கமாக இருந்த ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் இது பற்றி அவரிடமே ஒரு நாள் குமுறலை வெளியிட்டு கேள்வி கேட்டுவிட்டார்.

அதற்கு எம்ஜிஆர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

என்கிட்ட சத்துணவு திட்டத்தை பற்றி விமர்சிக்கிற தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும், கேள்வி கேட்கிற பத்திரிகைகாரங்களுக்கும் அடுத்தவேளை சோறு என்பது கேரண்டியா இருக்கு.

அதனால சிரிச்சிக்கிட்டே கிண்டல் அடிக்கிறாங்க...கேள்விகேக்கறாங்க...

ஆனா நான் சோறு போட நினைக்கும் குழந்தைகளுக்கு அந்த கேரண்டியே கிடையாது... அதனால இவுங்க விமர்சனத்தையெல்லாம் நான ஏன் பெருசா எடுத்துக்கணும்?

இருபதாண்டுகளுக்கு முன்னர் அந்த ஸ்டண்ட் மாஸ்டர் என்னிடம் சொன்னது இன்று காலையில் சாப்பிடும்போது ஏனோ நினைவுக்கு வந்துவிட்டது.

-Elumalai Venkatesan

Visit our Page -► தமிழால் இணைவோம்

Tuesday, September 3, 2013

புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா tamil song

தமிழால் இணைவோம்:
புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா

சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலநூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு
இலைகளில் ஒளிகின்ற கிளிக்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவண்ணமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்

துள்துள்துள் துள்துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல் போல் ஓடும் வேகம் தந்தது யாரு
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்ஜலென ஓடு நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு
மழையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவண்ணமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்

இனிய இரவு வணக்கம் நண்பர்களே!

இருசக்கர வாகனப் பயன்பாட்டாளர்கள் Message from தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம்:
நாம் அனைவரும் இருசக்கர வாகனப் பயன்பாட்டாளர்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் நாம் வாகன எரிபொருள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதால் பெட்ரோல் செலவை 15% முதல் 25% குறைக்கலாம். எரிபொருள் நுகர்வு 3% குறைந்தாலே 16000 கோடி சேமிப்பாகும் என்று மத்திய அமைச்சர் கூறுகிறார். இந்நடைமுறைகள் யாவும் பல்லாண்டுகளாக எனக்குப் பயன் தந்தவை. உங்களுக்கும் உதவக்கூடும். உங்கள் வழியாக நாட்டுக்கும் பயனபடட்டும்.

1. புதிய வண்டி என்றால் முதல் 1500 கிலோமீட்டர்களை 40கிமீ வேகத்திற்குள் ஓட்டுங்கள். பிறகு எப்பொழுதும் 35 முதல் 55 கிமீ வேகத்திற்குள்ளாக மட்டுமே ஓட்ட வேண்டும்.

2. பழைய வண்டி என்றால் உடனடியாகத் தண்ணீர் பீய்ச்சியடித்துக் கழுவி, கிரீஸ் போன்ற உயவுப்பொருள்களைச் சக்கரச் சங்கிலிகளுக்குப் பூசுங்கள். அது தொய்வில்லாமல் உரிய அழுத்தத்தில் இருமுனைகளிலும் பொருந்தியிருக்கட்டும்.

3. ஏர்பில்டர் எனப்படும் காற்றுச் சல்லடையை உடனே மாற்றுங்கள். காற்றை உறிஞ்சி எரிகலவை செய்ய அனுப்பித் தருவது அதன் வேலை. அது தூசுபடிந்து இருந்தால் எரிகலவையில் பெட்ரோல் அதிகரித்து தேவையில்லாமல் வீணாகும். ஏர்பில்டரின் விலை மிகவும் குறைவுதான் (எண்பது ரூபாய்க்குள் இருக்கும்).

4. சக்கரங்களின் காற்றழுத்தத்தைத் தினமும் சோதித்தபின் வண்டியை எடுங்கள். பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவே காற்றழுத்தம் இருக்கட்டும். முன் சக்கரத்திற்கு 28ம் பின்சக்கரத்திற்கு 38ம் இருக்கலாம். காற்றளவு சரியாக இருந்தாலே வண்டி இலகுவாகப் பாயும். நம்மூர்ச் சாலைகள் வழுவழுப்பானவை அல்ல என்பதால் காற்றழுத்த மிகை எந்த ஆபத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை (ஈரச்சாலைகளில் மட்டும் தவிர்க்க வேண்டும்).

5. நீங்கள் வழக்கமாகப் பயணம் செய்யும் சாலைகளைக் கவனித்து வைத்திருங்கள். மேடுகளில் முடுக்கியை முறுக்கி வண்டியைச் செலுத்தியபின், அடுத்து வரும் இறக்கத்தில் வண்டியை முறுக்காமல் 'பள்ளத்தை நோக்கிப் பாயும் வேகத்தைப்' பயன்படுத்திச் செல்லுங்கள். இதை நெடுஞ்சாலைகளில் செய்தால் பலன் பிரமாதமாக இருக்கும். சாலைகளின் இயல்பு என்பது ஒரு மேடு, அடுத்தொரு சரிவு, சரிவின் முடிவில் ஒரு பாலம், மீண்டும் மேடு என்பதுதான்.

6. அதிகாலை நேரங்களில் பெட்ரோல் நிரப்புங்கள். அப்போதுதான் சாவடியின் கொள்கலனில் வெப்பத்தால் விரிவடையாத பெட்ரோல் இருக்கும். அது ஒப்பீட்டளவில் சற்றே அடர்த்தி மிகுந்தது.

7. நீங்கள் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டீர்கள் என்றால் நூறு மீட்டர்களுக்கு முன்னேயே வண்டியின் இயக்கத்தை சொஸ்தப்படுத்துங்கள். வரவேண்டிய இடம் வந்து சேரும்வரை முறுக்கிக்கொண்டு வந்து அழுத்தி நிறுத்தாதீர்கள்.

8. இருசக்கர வாகனத்தில் சட்டப்படி இருவர் செல்லலாம் என்றாலும் அது ஒருவர் மட்டுமே செல்வதற்குத்தான் உகந்தது. இருவர் என்றால் அதன் செயல்திறன் கடுமையாகவே பாதிக்கும். முடிந்தவரை தனியொருவராகவே பயணிக்கவும்.

9. பெட்ரோல் போடும்போது, வழியில் ஒருவரோடு நின்று பேசும்போது, சாலை சமிக்ஞை விளக்குக்காகக் காத்திருக்கும்போது இஞ்சினை அணைத்துவிடுங்கள்.

10. வண்டியை உரிய கால இடைவெளியில் பழுது நீக்குங்கள். பழுது நீக்குபவர் நம்பிக்கைக்குரியவராக, நீங்கள் கோரும் பணிகளைச் செய்து தரத் தயங்காதவராக இருக்கட்டும்.

மேற்சொன்ன எதுவுமே பொருட்செலவு மிகுந்த செயல்கள் அல்ல. நம் அக்கறை சார்ந்த செயல்களே. இவற்றைப் பின்பற்றிப் பாருங்கள். வண்டியின் எரிபொருள் செலவில் நல்ல சேமிப்பைக் காண்பீர்கள். வண்டியின் மைலேஜ் 25% வரை அதிகரிக்கும். நண்பர்களுக்கும் இம்முறைகளை அறிவுறுத்துங்கள் !

-கவிஞர் மகுடேசுவரன்

Visit our Page -► தமிழால் இணைவோம்

Monday, September 2, 2013

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் tamil padal varigal

தமிழால் இணைவோம்:
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
.பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன்
கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

அழகு மிகுந்த ராஜகுமாரி
மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன்
படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான்
உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி!

இனிய இரவு வணக்கம் நண்பர்களே!

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts