Thursday, October 31, 2013

தீபாவளி சிறுவர் கவிதை deepavali kavithai

தீபாவளி சிறுவர் கவிதை

இந்தியத் திருநாட்டின் 
வாண வேடிக்கை திருவிழா!
படபடவென்று
 பட்டாசு வெடித்து 
இனிப்பு பலவற்றை
 நாவில் சுவைத்து 
அரக்கனை அழித்த
 நாளை நினைத்து 
நல்லதை மட்டுமே 
மனதில் இருத்து! 

நல்லவர் நடுவே 
தீயவர் சிலர் 
அந்தக்காலம்! 
தீயவர் நடுவே
நல்லவர் சிலர் 
இந்தக்காலம்! 

சீட்டு மோசடியும் 
கோழி மோசடியும் 
செல்போன் திருட்டும்  
செயின் பறிப்பும்
பஞ்சமே இல்லாமல் 
பரவிக் கிடக்கின்றன! 

பள்ளிக் கூடங்கள் 
தனியாரிடமும் 
மதுக்கூடங்கள் 
அரசாங்கத்திடமும் 
தலைகீழாக 
தவம் செய்கின்றன! 

படிக்க வேண்டிய 
இளம் பட்டாம்பூசசிகள் 
கந்தக குவியலில் 
கிழிந்த காகிதமாய்!

ஆயிரம் இருந்தாலும் 
இந்த நாட்டில்தான்  
நாம் வாழப் போகிறவர்கள்! 
நம்மில் சிலபேர்தான் நாளை 
நாட்டை ஆளப்போகிறவர்கள்!

உண்மையாய் ஒழுக்கமாய்  
நல்லவனாய் வாழுவோம்!
நாளைய பாரதத்தை 
 நேர்மையாய் ஆளுவோம்!

shared via

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts