Friday, August 16, 2013

கடற்கரை மணல் கொள்ளை - வி.வி மினரல்ஸ் நிறுவனம் - VV Minerals

Inline images 1 
கடற்கரை மணல் கொள்ளை :

அணுசக்தி துறையில் பயன்படுத்தப்படும் கார்னெட் மணலை அள்ளி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி.
கடற்கரை மணல் கொள்ளையர்களால் தூக்கியடிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ்குமார்

‪‎நேற்று‬:
இந்தியாவிலுள்ள அனைத்து ஆறுகளிலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் மணல் அள்ளக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை

சென்ற‬ மாதம்:இயற்க்கை வளங்கள் மக்களின் பொது சொத்து -தமிழக முதல்வர்

நடிகர் விஜய், அமலாபால் உள்ளிட்ட படக்குழுவினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு thalaiva issue actor vijay including units hunger strike plan

நடிகர் விஜய், அமலபால் ஜோடியாக நடித்து, இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவா’.  இந்த படத்தை வெளியிட்டால் திரை அரங்குகளில் குண்டு வைப்போம் என்று ஒரு தரப்பினர் மிரட்டல் விடுத்ததன் காரணமாக, படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாவது தடைபட்டது.

இருப்பினும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் ‘தலைவா’ குறிப்பிட்ட தேதியில் வெளியானது. இதனால், இப்படத்தின் திருட்டு விசிடிக்கள் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளன. இதனால் படக்குழுவினர் பெரும் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.

Wednesday, August 14, 2013

உண்மையான மதிப்பு true value

தமிழால் இணைவோம்:
ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன்
ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது..

அது வைரம் என்றறியாமல்,
விலை போகுமா என்ற
சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..

அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன்,
இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்..

ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற
எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்..

ஐந்து ரூபாய் அதிகம்
கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20
ரூபாய்க்கு பேரம் பேசினான்..

இதைக் கவனித்த
மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்..

ஆத்திரமடைந்த வியாபாரி,
அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட
முட்டாளே ! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல்
விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்..

அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய
மதிப்பு அவ்வளவுதான்..
ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய
முட்டாள்” என்றான்..

சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும்,
கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்..

Tuesday, August 13, 2013

தமிழாக மாறிபோன ஆங்கிலம் tamil and english

Wait, dress, thanks, hai, hello, bye, Take Care, Interest, Problem, Miss you, Love you, Hate you, Tv, Phone, Computer, Lap top, Watch, Pin, Safe, Lock, Purse, Key Chain, Cycle, Box, Calling Bell, Bottle, Excuse me, Pen, Pencil, rubber, Scale, File இப்படி பல வார்த்தைகள்

தமிழால் இணைவோம்:
தமிழாக மாறிப்போன ஆங்கிலம் !

1) வீட்டுக்கு போனதும் தகவல் சொல்லுனு சொல்வோம் ஆனா இப்போ... message பண்ணு இல்ல missed call கொடு.

2) பாத்து சூதானமா, கோளாற போய்ட்டுவானு சொல்லுவோம் ஆனா இப்போ... Safeஆ போய்ட்டுவா.

3) சரி, ஆகட்டும்னு சொல்லுவோம் இப்போ என்ன சொல்லுறோம் ok, Ok done.

4) முன்னலாம் யாராது தெரியாதவங்கள கூப்பிடனும்னா ஏங்க, அய்யா, அம்மானு கூபிடுவோம் இப்போ hello, hello sir, hello madam.. இங்க என்ன போன்லயா பேசுறீங்க..? hello helloனு.

5) விருந்தினரையோ, நண்பர்களையோ பார்த்தா வணக்கம் சொல்லுவோம் இப்போ hai சொல்லிக்கிறோம்.

6) எனக்கு இதுல விருப்பம், அதுல விருப்பம்னு சொல்லுவோம், இப்போ விருப்பம் intrest ஆ மாறிப்போச்சு..

7) யாரு காலையாவது மிதிச்சுட்டா சிவ, சிவா னு சொல்லுவோம், இப்போலாம் எவன் கால மிதிச்சாலும் sorry தான்.

8 ) நன்றி என்ற ஒரு வார்த்தையை தமிழன் மறந்தே போய்ட்டான்.. எதுக்கேடுத்தாலும் Thank you so much தான்.

9) இது எல்லாத்துக்கும் மேல நம்ம காதலிக்கிற பொண்ணுகிட்ட நான் உன்னை காதலிக்கிறேன்னு அழகு தமிழ்ல சொல்லுறத விட்டுபுட்டு i love you னு சொல்லுறானுகளே..

Wait, dress, thanks, hai, hello, bye, Take Care, Interest, Problem, Miss you, Love you, Hate you, Tv, Phone, Computer, Lap top, Watch, Pin, Safe, Lock, Purse, Key Chain, Cycle, Box, Calling Bell, Bottle, Excuse me, Pen, Pencil, rubber, Scale, File இப்படி பல வார்த்தைகள் தமிழோடு கலந்து விட்டது... இந்த வார்த்தைகளை உச்சரிக்காமல் தமிழே பேச முடியாது என்ற அளவிற்கு அடிமை ஆகிவிட்டான் ஆங்கிலத்திற்கு.

#நந்தமீனாள்

Sunday, August 11, 2013

காதலால் காணமால் போகும் ஹன்சிகா

சிம்புவுடன் கொண்ட காதலால் பட
வாய்ப்புகளை இழந்து வருகிறார்
நடிகை ஹன்சிகா மோத்வானி.
சிம்புவை காதலிப்பதாக
ஹன்சிகா செய்தி வெளியிட்டதை தொடர்ந்து,
அவரிடம் கால்ஷீட் கேட்டுதுரத்திக்
கொண்டிருந்த சில தயாரிப்பாளர்கள்
பின்வாங்கி விட்டனர்.
அதனால்,
அவர்களை தொடர்புகொண்டு இன்னும்
ஐந்து ஆண்டுகளுக்கு, சினிமாவில் தான்
இருப்பேன்
என்று ஹன்சிகா நம்பிக்கை வாக்குறுதி அளித்து வருகிறாராம்.
ஆனால் அதை யாரும்
காது கொடுத்து கேட்பதாக இல்லை.
ஹன்சிகாவை தவிர்த்து விட்டு மாற்று நடிகை தேடிசெல்லும்
தயாரிப்பாளர்கள் நயன்தாரா, காஜல் அகர்வால்
ஆகியோரை நாடுகின்றனராம்.
அவர்களின் கால்ஷீட் கிடைக்காவிட்டால்
நஸ்ரியாவை தேடிச்செல்கின்றனர்.
தனக்கான வாய்ப்புகள் கை நழுவிப் போவதால்
மிகுந்த வருத்தத்தில் இருக்கும் ஹன்சிகா,
காதல்
விவகாரத்தை அவசரப்பட்டு கூறிவிட்டோமோ என்று புலம்பி வருகிறாராம்

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts