Friday, December 13, 2013

பலான கோளாறுக்கு பலனளிக்கும் பலாக்கொட்டை jack fruit seed cures impotency

Img பலான கோளாறுக்கு பலனளிக்கும் பலாக்கொட்டை jack fruit seed cures impotency

நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நமது பாரம்பரிய வழக்கமாகும். அசைவ உணவைப் போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.

பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், இவை செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும்.

அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளதுதான்பலாக்கொட்டை."அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா" என்ற தாவரவியல் பெயர் கொண்டமொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாகவும் உட்கொள்ள ஏற்றது.

100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டவை.

இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.

பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மையாக அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20,உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மையாக அரைத்து, வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் உண்டாகும்.

பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது.
...

Thursday, December 12, 2013

Who is ravana's father in ramayana?

Who is ravana's father in ramayana?

Answers 

Ravana's father is a Great saint Visrava who is also a master of Mystic yoga. He had 2 wives Idavida and Kesini.
Idavida gave birth to Kuvera - King of yakshas
Kesini gave birth to Ravana, Kumbakarna and Vibhishana

Wednesday, December 11, 2013

சென்னையில் மல்லிகைப்பூ விலை ‘கிடுகிடு’ உயர்வு Chennai jasmine flower price increases

Img சென்னையில் மல்லிகைப்பூ விலை 'கிடுகிடு' உயர்வு Chennai jasmine flower price increases

சென்னை, டிச. 12-

திருமணம், நிச்சயதார்த்தம் உள்பட எல்லா சுபகாரிய நிகழ்ச்சிகளிலும் மல்லிகைப்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. சமீப காலமாக மல்லிகை பூ விலை, தங்கம் விலையைப்போன்று அதிகரித்து வருகிறது.

இதனால் தலை நிறைய பூக்கள் வைத்து வந்த பெண்கள், தற்போது பெயரளவில் மட்டும் தலையில் பூவை வைத்துச்செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பூக்களின் விலை உயர்வுக்கான காரணம் குறித்து, சென்னை கோயம்பேடு மலர் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் அருள் விசுவாசம் கூறியதாவது:–

சென்னை கோயம்பேடு மலர் அங்காடிக்கு திருவள்ளூர், காஞ்சீபுரம், திருத்தணி உள்பட இடங்களில் இருந்து அன்றாடம் 10 முதல் 12 மினிவேன்கள், ஆட்டோக்கள் மூலம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கிலோ வரை மல்லிகைப்பூக்கள் வரத்து இருந்து வந்தது.

தற்போது பனிபொழிவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மல்லிகைப்பூவின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மலர் அங்காடிக்கு வெறும் 3 முதல் 5 ஆட்டோக்கள் மூலம் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் கிலோ வரை மட்டுமே மல்லிகைப்பூ வருகிறது.

இதன் காரணமாக மல்லிகைப்பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.300 முதல் ரூ400 வரை விற்பனையான மல்லிகைப்பூ, தற்போது ஒரே மாதத்தில் கிலோவுக்கு ரூ.800 வரை விலை உயர்ந்து, கடந்த 2 நாட்களாக மல்லிகைப்பூ கிலோ ரூ.1,000 லிருந்து ரூ.1,200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் இன்று மல்லிகைப்பூவின் விலை மேலும் அதிகரிக்கும். பிப்ரவரி மாதத்திற்கு பிறகே பூக்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மல்லிகைப்பூ மட்டுமின்றி முல்லை, ஜாதி, கனகாம்பரம், ரோஜா, செண்டுமல்லி உள்பட பூக்களின் விலையும் கிலோவுக்கு சராசரியாக 5 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய பூக்கள் விற்பனை நிலவரம்:–

(கிலோவில்) முல்லை– ரூ.800, ஜாதி– ரூ.500, கனகாம்பரம்– ரூ.600, சாமந்தி– ரூ.100, ரோஜா– ரூ.100, செண்டுமல்லி– ரூ. 50.
...

Tuesday, December 10, 2013

பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. molestation case file on aam aadmi party

Img பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மீது வழக்கு molestation case file on aam aadmi party

புதுடெல்லி, டிச,10–

டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 28 இடங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அவர்களில் தர்மேந்தர் கோலி என்ற எம்.எல்.ஏ.வும் ஒருவராவார். அவர் சீமாபுரி என்ற தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

தர்மேந்தர் கோலி மீது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வீர்சிங்கின் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர், ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் ஆம் ஆத்மி கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.

அப்போது தர்மேந்தர் கோலி என் வீட்டுக்குள் வந்தார். என்னிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து அநாகரீகமாக நடந்து கொண்டார்.

ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் பலர் கைகளில் மதுபாட்டில் வைத்திருந்தனர். எங்கள் பகுதியில் உள்ள வால்மிகி கோவிலுக்குள் அவர்கள் மதுபாட்டில்களை எறிந்து அடாவடி செய்தனர்.

இவ்வாறு காங்கிரஸ் வேட்பாளர் வீர்சிங்கின் மனைவி புகார் மனுவில் கூறியுள்ளார். அந்த புகாரை ஏற்று போலீசார் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. தர்மேந்தர்கோலி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

...

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts