Saturday, August 24, 2013

ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ? mens beauty

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.

2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.

3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.

4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.

5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.

6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.

7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.

8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.

9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.

10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.

# சுயநலமில்லாத,செயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்.

-ஆதிரா

Friday, August 23, 2013

மாவீரன் அலெக்சாண்டர் - Alexander the Bold

சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டிய மாவீரன் அலெக்சாண்டர் தனது 33 ஆம் வயதில் மரண தறுவாயில் படை தளபதியை அழைத்து தனது மரணத்திற்கு பிறகு செய்யப்பட வேண்டிய 3 காரியங்களை கூறினான்...

1) தனது சவப்பெட்டியை தனக்கு மருத்துவம் பார்த்த நாட்டின் மிகச்சிறந்த அந்த மருத்துவர்களே சுமந்து செல்ல வேண்டும்..

2) தனது சவ ஊர்வலம் செல்லும் போது, பாதையில் பொன்னையும் பொருளையும் வாரி இறைக்க வேண்டும்...

3) சவப்பெட்டியில் மேல்புறம் துளையிட்டுதனது 2 கைகளையும் விண்ணை நோக்கி உயர்ந்திருக்க செய்து, அதை மக்கள் காண செய்ய வேண்டும்....

இப்படி 3 வேண்டுகோள்களையும் விடுத்துவிட்டு அதற்கான காரணங்களையும் கூறினான் ..

1) எவ்வளவுதான் சிறந்த மருத்துவம் பார்த்தாலும் உயிர் போவதை எப்போதும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது..

2) இம்மண்ணுலகில் வாழும் போது எவ்வளவு சம்பாதித்தாலும்அது இம்மண்ணுலகில் தான் இருக்கும் ...கூட வராது..

3) மாவீரன் அலெக்சாண்டர் எவ்வளவுதான் நாடுகளையும்,பொருளையும் சம்பாதித்தாலும்செத்தபின்பு வெறும் கையுடன்தான் போகின்றான் என மக்கள் அறியவேண்டும் ....

- இந்துப் பிரியா

Wednesday, August 21, 2013

வெற்றிக்கு வழி -vetri

வெற்றிக்கு வழி

**************

1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள்.

2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர்.

3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும்.

4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.

5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது,
மற்றொன்று நாமே ஏறுவது.

6. வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது.

7. பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும்.

8. முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.

9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.

10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம் பாதி அறிவு.

Tuesday, August 20, 2013

அழுத்தமான நம்பிக்கை!

சட்டமன்றத்தில் திமுக முதற்பெரும் எதிர்க்கட்சியாய் நுழைந்த நேரம்…

நாவலர் நெடுஞ்செழியன்தான் எதிர்க் கட்சித் தலைவர். இரவு முழுவதும் பல்வேறு குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு சென்றிருந்தார். பொருளாதாரத்தில் ஆடம்ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை அனைத்து மேதைகளும் கூறிய பொன்மொழி களை அழகாக நாவலர் எடுத் துக் கூறிக்கொண்டிருந்தார்.

என்னவளே அடி என்னவளே - தமிழ் பாடல் வரிகள் Tamil Lyrics



என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்

(என்னவளே.................)

Monday, August 19, 2013

பெண்களுக்கான எச்சரிக்கை Warning for Women


பெண்களுக்கான எச்சரிக்கை :

-----------------------------------------
தயவு செய்து தாங்கள் பேஸ்புக்கை கையாளும் போது கவனமாக கையாளவும். பல விஷமிகள் நல்லவர்கள் போன்ற முகமுடியணிந்து பரவிக்கிடக்கிறார்கள். அதனால்

1. பெண்கள் எக்காரணத்தை கொண்டும் தங்களது தொலைபேசி எண்களை பொதுவான இடங்களில் தெரியப்படுத்த வேண்டாம்.

2. தங்களது புகைப்படம், முகவரி, சொந்த விவரம், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை எக்காரணத்தை கொண்டும் வெளியிட வேண்டாம்.

எனக்குத் தெரியாது

எனக்குத் தெரியாது

நான் படித்த படிப்பே என் குடும்பத்திடம் இருந்து என்னை பிரிக்கும் என எனக்குத் தெரியாது.

டி.வி . எஸ் வண்டி என் ஊருக்கு வந்த போதும் , மாட்டு வண்டி மறைந்த போதும் ஒரு காலத்தில் அதையே காரணம் காட்டி என் நிலத்தை பறித்து மீத்தேன் எடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது.

நல்ல தரையில் செருப்பில்லாமல் நடந்த போது வல்லரசு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியினால் நல்ல தரை என்பதே இல்லாமல் போய் விடும் என்பது எனக்குத் தெரியாது.

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts