Friday, August 30, 2013

பிரதமரை திருடன் என்று கூறும் அநியாயம் மன்மோகன் சிங் வேதனை PM discent of MPS shouting him as theif

எந்த நாட்டிலாவது பிரதமரை திருடன் என்று கூறும் அநியாயம் நடப்பதுண்டா?: மன்மோகன் சிங் வேதனை PM discent of MPS shouting him as theif 

 

ஒரு நாட்டின் பிரதமரை திருடன் என்று கூறுவது எந்த நாட்டிலாவது நடப்பதுண்டா? என பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை அடைந்து வரும் நிலையில், இது தொடர்பாக  பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.


இதனையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்ற மேல்சபையில் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு பல்வேறு உள்நாட்டுக் காரணிகளும் காரணங்களாக உள்ளன. சர்வதேச பொருளாதார வீழ்ச்சியும், ரூபாயின் மதிப்பு சரிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

சிரியாவில் தற்போது நிலவி வரும் பதற்றம் உள்பட, எதிர்பாராத வகையில் வெளியில் இருந்து வரும் அழுத்தமும் ரூபாயின் மதிப்பு சரிவுக்கு காரணமாகி விடுகிறது. பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடும் பொருளாதாரத்தில் எதிரொலிக்கின்றன.

இந்த நிலையில், இந்திய ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டியதும், தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்க வேண்டியதும் அவசியமாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் தேவைக்குறைவும், ஏற்றுமதி குறைவுக்குக் காரணமாக அமைந்துவிட்டது. பொருளாதார சரிவை காரணம் காட்டி எந்த முதலீட்டு திட்டத்தையும் மத்திய அரசு குறைக்கவில்லை.

இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாகவே, இந்தியா தொடர்ந்து பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. எனவே, கொள்கை முடிவுகளில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரும் திட்டமில்லை.

இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை உயர்த்தும் வகையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலீடுகளை அதிகரிக்கும் வகையில், முதலீட்டாளர்களுக்கு ஏற்ற எளிதான கொள்கைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

தொடர்ந்து பேசிய பிரதமர், ஒழுங்கை மீறிய வகையில் பாராளுமன்றத்தின் மையப்பகுதியை நோக்கி பாயும் எம்.பி.க்கள், பிரதமரை திருடன் என்று கூறும் செயல் எந்த நாட்டிலாவது நடப்பதுண்டா? என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts