Friday, July 26, 2013

அப்பாக்கள் பலவிதம்..!

இரண்டு நாட்களுக்கு முன் மதியம் புரசைவாக்கத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். அடையார் ஆனந்த பவனுக்கு எதிராக செல்லும் சுந்தரம் தெருவில் ஒரு சிறு கூட்டம். ஒரு சிறுமியின் அழுகுரல். வண்டியை ஓரமா நிறுத்திவிட்டு கிட்டே சென்றேன்.

கூட்டத்துக்கு நடுவே தாடியும்

குல்லாவும் அழுக்கு லுங்கியுமாக இருந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் கையை 30 வயது மதிக்கத்தக்க சுடிதார் அணிந்திருந்த பெண்மணி ஒருவர் இழுத்து பிடித்துக் கொண்டிருந்தார். கழுத்தில் பளிச் தங்க செயின்கள் கொத்து வேறு. அந்த ஆண் பெண்மணியிடமிருந்து தப்பி ஓடும்வகையில் நழுவிக் கொண்டிருந்தார்.

அந்த ஆணின் பின்னே இடுப்பைக் கட்டிப்பிடித்தபடி முகம் மட்டும் தெரியும் வகையில் கருப்பு நிற புர்க்கா அணிந்திருந்த ஒரு 7 வயது மதிக்கத்தக்க சிறுமியின் அழகான முகம் தெரிந்தது. ஆனால் அழுது கொண்டிருந்தாள்.

முதலில் ஒன்றுமே புரியவில்லை. ஒரு ஆணின் கையை இழுத்து பிடித்து நிற்கும் ஒரு பெண்ணை பார்த்ததும் பணம் திருட்டு .. அல்லது குழந்தை கடத்தல்.. என்று தான் முதலில் நினைத்தேன்.

குழந்தை கடத்தல் என்றால் சிறுமி அந்த நபரிடமிருந்து விடுபட முயன்றிருக்க வேண்டும். ஆனால் அந்த சிறுமியோ அந்த ஆளைவிட்டு வர மறுத்தாள். அந்த பெண்மணியோ உடும்புப்பிடியாக பிடித்துக் கொண்டு அவரை விடத்தயாராக இல்லை.

இந்த களேபரத்திற்கிடையில் கூட்டம் அதிகரிக்க டிராபிக் ஜாம். ஒருவழியாக அவர்களை ஒரு கடையின் ஓரமாக ஓரம் கட்டியப்பின் வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தோம்.

யாருக்கோ போன் போட்டு லொக்கேசன் அட்ரஸ் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த பெண்மணி. ``என்னங்க பிரச்னை..” என்று விசாரித்தேன். `` இந்த ஆளு தினமும் குழந்தையை பிச்சை எடுக்க வைக்கிறாங்க.. இப்போ ரம்ஜான் ஆரம்பமாகிடுச்சா.. அதான் குழந்தையை கூட்டிட்டு சுத்துறான்” என்றார் கொத்திப்புடன்.

ஒரு குழந்தையை பிச்சை எடுக்க வைப்பதை கண்டு கொதிக்கும் ஒரு குடும்பத்தலைவியைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

``நீங்க யாரு மேடம்..?” என்றேன்.
`` நான் போலீஸ் சார்..” என்றபடி கைப்பையிலிருந்து ஐடி கார்ட்டை எடுத்து காட்டினார். வேடிக்கைப் பார்த்த கூட்டம் ஜெர்க்காகி ஒரு ஸ்டெப் பேக் போனது. (:))

அந்த ஆள் அவசர அவசரமாக.. `` தினமும் இல்ல சார்.. இன்னைக்கு ஒரு நாள் தான் வந்தோம்..: என்றார். நான் அந்த சிறுமியின் அருகே சென்று தலையில் தடவி கொடுத்து ``பயப்படாதடா.. யாரும்மா இவரு” என்றேன். ``எங்க வாப்பா.." என்றாள் அழுது கொண்டே. அதோடு எங்கே தன் தந்தையை இவர்கள் அடித்து விடுவார்களோ என்று பயந்து மேலும் இருக்கமாக அவரை கட்டிப்பிடித்து கொண்டாள்.

``ஏங்க குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பாம இப்படி பிச்சை எடுக்க கூட்டிட்டு வர்றீங்களே..” என்று கூட்டத்தில் நாலுபேர் சத்தம்போட ஆரம்பித்தார்கள்.

``எந்த ஏரியா.. என்ன பண்ற..” என்று பெரியவர் ஒருவர் விசரிக்க, ``வீடு ரேசன் கார்டு கிடையாது சார். அயனாவரத்தில் ஒரு ரோட்டு ஓரத்துல தான் இருக்கோம். இன்னைக்கு லீவு.. அதான் பாப்பாவ கூட்டிட்டு தர்மம் வாங்க வந்தேன்.. தப்புதான்.. இனி கூட்டிட்டு வர மாட்டேன்..” என்றார் பரிதாபமாக. பிச்சை எடுப்பதில் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் போல.. கண்ணெல்லாம் கலங்கி வேர்த்துக் கொட்டியது அவருக்கு.

``ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டா நல்லா படிக்கும்.. இப்படி பிச்சை எடுக்க வைக்கிறீங்களே..” என்றார் ஒருவர். ``குழந்தையை பிச்சையெடுக்க வச்சது தப்புத்தான்.. ஆனா என்ன பண்றது.. சத்தம்போட்டு அனுப்பி வைங்க மேடம்..” என்றார் மற்றொருவர்.

சிறிது நேரத்தில் காவலர் ஒருவர் வந்தார். ``ஒண்ணும் பண்ண மாட்டோம்.. ஸ்டேஷனுக்கு வந்து இனி குழந்தையை பிச்சை எடுக்க அனுப்பமாட்டேனு எழுதி கொடு.. இல்ல ஹாஸ்டலுக்கு அனுப்பு.. அவங்க படிக்க வைப்பாங்க.. இப்போ கிளம்பு..” என்று கூறியபடியே ஆட்டோவில் அந்த ஆளை வலுக்கட்டாயமாக ஏற்றினார்கள்.

அப்பாவை என்னமோ பண்ணப்போறாங்க என்று பயந்துபோய்,``எங்க வாப்பா.. வாப்பா.. அவர ஒண்ணும் பண்ணாதீங்க.. விடுங்க” என்று லுங்கியை பிடித்து கொண்டு இழுத்து பிடித்துக் கொண்டு நின்ற அந்த சிறுமியையும் ஏற்றிக்கொண்டு ஆட்டோ கெல்லீஸ் ஸ்டேஷனை நோக்கிப் பறந்தது..

ஆட்டோ சத்தத்தினூடாக.. ``எங்க வாப்பாவ விட்டுருங்க... ஒண்ணும் ப்ண்ணாதீங்க..” என்றுஅந்த சிறுமியின் குரல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது..

ஊருக்கு பிச்சைக்காரன் என்றாலும் அந்த குழந்தைக்கு அவன் அப்பன் தானே...!

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts