Thursday, July 25, 2013

அடி ராக்கம்மா கையத் தட்டு

பத்தாம் வகுப்பு பப்ளிக் எக்ஸாமின்போது, தமிழ் முதல் தாளில் கேட்கப்படும் மனப்பாட செய்யுளில் பல்சுவைப் பாடல்கள் (அப்படித்தான் நினைவு) என்ற தலைப்பில் கடைசியாய் சில செய்யுள்கள் இருக்கும்.


அவற்றைத் தவிர மற்ற பகுதிகளின் செய்யுள்களை கடம் அடித்தாகிவிட்டது. தேர்வின் முதல் நாள் திடீரென பயம், எங்கே அவற்றிலிருந்து ஏதேனும் பாடலை கேட்டுவிட்டால் என்று, அந்தப் பகுதியில் மொத்தம் நான்கு பாடல்கள் மனப்பாடச் செய்யுளாக இருந்தன. எல்லாமே கடினமான சொற்களாகவும்,அவசரத்திற்கு மனதில் பதிய வைக்க
முடியாததாகவும் இருந்தன. இருந்தாலும் தமிழில் அதுவரை வகுப்பில் முதலிடம் அது பறிபோய்விடுமோ என்ற எண்ணத்தில் விடக்கூடாது ஏதேனும் ஒரு செய்யுளையாவது மனனம் செய்ய வேண்டுமென நினைத்து புத்தகத்தைப் பிரித்தேன், எந்தச் செய்யுளை தேர்வு செய்யலாம் என்று குழப்பத்துடன் அமர்ந்திருந்தேன்.

அப்பொதெல்லாம் படிக்கும்போதும் இலங்கை வானொலியின் சேவை செவிகளுக்கு தேவையாக இருந்ததால் அருகில் ரேடியோவையும் வைத்துக்கொண்டுதான் படிப்பேன். ரேடியோவிலிருந்து காற்றலைகளுடே  , ”அடி ராக்கம்மா கையத் தட்டு” பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது, பாடலின் இசைக்கு ஏற்ப பென்சிலை புத்தகத்தில் தட்டியபடியே செய்யுளின் தேர்வில் இருந்தேன். “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் ” என்று பாடலின் இடை வரிகள் வந்தன. சரியாக என் பார்வை புத்தகத்தில் பதிந்திருந்த பக்கத்திலும் அதே பாடல். “ஆஹா, இதுதாண்டா நாளைக்கு கேக்கப் போறான்னு பட்சி ஸ்ட்ராங்கா சொல்லுச்சு” . கட கடவென மனப்பாடம் செய்துவிட்டேன்.

அடுத்த நாள் எக்ஸாம் ஹாலில் உட்கார்ந்ததும் மற்ற கேள்விகளை புறம் தள்ளி மனப்பாடச் செய்யுளாக என்ன வந்திருக்கிறது என்றுதான் தேடினேன். நிமிர்ந்த புருவமும், கடவாய்ச் சிரிப்புமாய் ஆனான்.

”எதேச்சையா நடந்தது..கோ இன்ஸிடன்ஸ்....என்ன வேணா இருக்கட்டும்”.

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts