Friday, July 26, 2013

5 ரூபாய்க்கு எப்படி சாப்பிட முடியும் ? காங்கிரஸ் கட்சிக்கு பிச்சைக்காரர் கேள்வி

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தொடர்பான புதிய புள்ளி விவரத்தை சமீபத்தில் திட்டக்கமிஷன் வெளியிட்டது. அதில் இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 21.9 சதவீதமாக குறைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் தினமும் ரூ.33 செலவு செய்பவர்களும், கிராமப்பகுதிகளில் தினமும் ரூ.28 செலவு செய்பவர்களும் ஏழைகள் அல்ல என்றும் திட்ட கமிஷன் கூறியுள்ளது. இது கடும் விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளாகி இருக்கிறது.
இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜ்பப்பர் மும்பையில் ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கு கிடைப்பதாக கூறினார். காங்கிரஸ் மேல் சபை எம்.பி. ரஷீத் மசூத், ‘‘டெல்லியில் ரூ.5–க்கு சாப்பாடு கிடைக்கிறது’’ என்றார்.
காங்கிரஸ் தலைவர்களின் இந்த பதிலும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. காங்கிரஸ் தொடர்ந்து தவறான தகவலை கூறி மக்களை ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஒரு பிச்சைக்காரர் ‘‘5 ரூபாய்க்கு எப்படி சாப்பிட முடியும்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பிச்சைக்காரர் ஜீம்மா மசூதி பகுதியில் வசித்து வருகிறார்.
அவர் கூறுகையில், ‘‘5 ரூபாய்க்கு சாப்பிடலாம் என்று சொன்ன காங்கிரஸ் எம்.பி. பங்களாவில் சொகுசாக வசிப்பார். இந்த ஏரியாவுக்கு வந்து விலை வாசியை விசாரித்ததால்தான் நிலவரம் தெரியும்’’ என்றார்.
காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத் கூறுகையில், ஜீம்மா மசூதி பகுதியில்தான் 5 ரூபாய்க்கு நல்லா சாப்பிடலாம் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்ன பகுதியில் ஒரு தண்ணீர் பாக்கெட் 2 ரூபாய்க்கு விற்கிறது. ஒரு டீ ரூ.7–க்கு விற்கப்படுகிறது.
ஒரு கப் உணவு விலை ரூ.25. அசைவ உணவு சாப்பிட வேண்டுமானால் ரூ.50–க்கு மேல் வேண்டும். எனவே ரஷீத் மசூத் எம்.பி. கூறியபடி டெல்லியில் எந்த பகுதியிலும் 5 ரூபாய்க்கு சாப்பிட முடியாது என்று தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts