Saturday, October 5, 2013

இன்டர்நெட் திடீர்னு கட் ஆயிடுச்சுனா.... break internet

இன்டர்நெட் திடீர்னு கட் ஆயிடுச்சுனா....

by Marikumar

இன்றைய காலகட்டத்தில் இணையம் என்பது மக்களுக்கு அத்தியாவசிய தேவையாகிவிட்டது என்றே கூறலாம். தற்போது கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை தொடர்ந்து பெருகி வரும் நிலையில், மைக்ரோசாப் விண்டோஸ் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, இணைய இணைப்பில் உள்ள அக்கவுண்ட் சார்ந்து அமைத்துள்ள நிலையில், இணைய இணைப்பு இருந்தால் தான், பொருள் பொதிந்த கம்ப்யூட்டர் பயன்பாடு கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆனால், இணைய இணைப்பு திடீர் திடீர் என விட்டுப் போவது, நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை ஆகிறது. குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது. இணைய இணைப்பு இல்லாமல் போவது என்பது, நமக்கு தும்மல் வருவது போல ஆகிவிட்டது.

தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காகக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும்; மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது. பொதுவாக இது போல கட் ஆனால், உடனே கம்ப்யூட்டரை ரீபூட் செய்து பார்க்கிறோம்.
நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம். கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இந்த நிறுவனத்தை முடித்து , வேறு ஒரு நிறுவனத்தின் சேவைக்கு மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம். இருப்பினும் கீழ்க்காணும் விஷயங் களையும் செய்து பார்க்கலாமே

1. வேறு எதனையும் செய்வதற்கு முன்னால், உங்கள் மோடத்தினை மீண்டும் ரீபூட் செய்திடுங்கள். ஒன்றுமில்லை, அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்தி சில நொடிகள் கழித்து மீண்டும் ஆன் செய்திடுங்கள். பின் உங்கள் ரௌட்டரை ஆன் செய்திடுங்கள்.

இவற்றில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துவோரே அதிகம். அவர்கள் அதனை மட்டும் ரீபூட் செய்தால் போதும்.

2. உங்களுக்கு ரௌட்டர் வழி இணைப்பு இல்லை என்றால் கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். அதன் பின் கேபிள் மோடத்தினை பூட் செய்திடுங்கள்.

3. மோடத்தில் விளக்குகள் எரிந்து டேட்டா பரிமாற்ற விளக்குகள் சிமிட்டத் தொடங்கினால் இன்டர்நெட் இணைப்பு வந்துவிட்டது என்று பொருள். அனைத்து விளக்குகளும் எரியவில்லை என்றால் உங்கள் இணைப்பிற்கான கேபிள்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள்.

அதன் பின் உங்களுக்கு இணைப்பு தந்துள்ள நிறுவனத்தின் கஸ்டமர் சர்வீஸ் எண்ணுக்கு போன் செய்திடுங்கள். அதற்கு முன் அவரிடம், எது போன்ற குறை என்று சொல்ல வேண்டும் என்பதனைத் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள். பின் குறையினைத் தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

4. புதிய பிரவுசர் விண்டோ ஒன்று திறந்து கொள்ளுங்கள். பின் www.dinamalar.com என்று தள முகவரி கொடுத்துப் பாருங்கள். தினமலர் வெப்சைட் கிடைத்தால், நல்லது. இல்லை என்றால் தொடர்ந்து அடுத்து தரப்பட்டுள்ள செயல்முறைகளை மேற்கொள்ளுங்கள்.

5. ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில், ரன் பாக்ஸில் cmd என டைப் செய்து என்டர் தட்டவும். உங்கள் மானிட்டர் திரையில், கறுப்பு பாக்ஸில் டாஸ் இயக்கம் கிடைக்கும். அங்கு துடிக்கும் கர்சரில் Ipconfig /all என டைப் செய்திடுங்கள்.
உங்களுடைய default gateway மற்றும் DNS servers அறிந்து கொள்ளுங்கள். பின் இவற்றிற்கு கட்டளை கொடுத்துப் பாருங்கள். பதில் கிடைக்கிறதா?

6. இவை அனைத்தும் உங்கள் இணைப்பைத் தராவிட்டால், traceroute எனக் கொடுத்துப் பார்த்தால் எங்கு பிரச்சினை ஏற்பட்டு இணைப்பு அறுந்து போகிறது என்று தெரியும். traceroute என்பது ஒரு கட்டளைச் சொல். உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து தகவல்கள் ஒரு பாக்கெட்டாக எங்கெங்கு செல்கின்றன என்று காட்டச் சொல்லும் ஒரு கட்டளை. traceroute எனக் கொடுத்து பின் ஒரு ஸ்பேஸ் கொடுத்து உங்களுக்குச் சிக்கலைத் தரும் தளத்தின் முழு முகவரியைத் தர வேண்டும்.

பொதுவாக ஒரு தளம் கிடைக்கவில்லை என்றால் இது போல traceroute மற்றும் ping கட்டளைகள் கொடுத்துப் பார்த்துவிட்டுப் பின் இன்டர்நெட் சேவை தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். முதலில் உங்கள் யூசர் நேம் கொடுக்கவும். அவர்கள் உங்கள் அக்கவுண்ட்டினைச் சார்ந்த மேலும் சில தகவல்களை உறுதி செய்வார்கள்.

அவர்கள் கூறும் செயல்பாடுகளையும் பொறுமையாக மேற்கொண்டு, பதில் கொடுங்கள். நிறுவனத்தின் சர்வரில் பிரச்சினை இருந்தால் அவர்கள் உடனே அதனை உங்களுக்குத் தெரிவித்து, உங்கள் குறை எந்த எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எத்தனை மணி நேரத்திற்குள் அது சரி செய்யப்படும் எனவும் கூறுவார்கள்.

பொறுமையாகக் காத்திருக்கவும். தொடர்ந்து சரி ஆகவில்லை என்றால், மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்தினைத் தொடர்பு கொண்டு நினைவு படுத்தவும். நிச்சயம் இணைப்பு சரி செய்யப்படும்.
Share |

Show commentsOpen link

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts