Thursday, October 3, 2013

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா 5–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் Dussehra festival 5th day kodiyettam

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா 5–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் Dussehra festival 5th day kodiyettam

Tamil NewsToday, 05:30

உடன்குடி.அக்.3–

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதை தொடர்ந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து காப்பு கட்டுவார்கள். அதன்பின் தனக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்வார்கள்.

விழாவையொட்டி 5–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை தினசரி நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருள்வார்.

வேடம் அணிந்த பக்தர்கள் தசரா குழு அமைத்து நையாண்டி மேளம், கரகம், காவடி, குறவன், குறத்தி மற்றும் கிராமிய கலைகள், டிஸ்கோ ஆகியன இணைத்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை பெறுவார்கள். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா திருவிழா களை கட்டும்.

விழாவின் முக்கிய நாளான 14ம் தேதி திங்கட்கிழமை காலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்குவார்கள்.நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி வேடம் அணிந்த பக்தர்கள் அம்மனை அணிவகுத்து செல்வார்கள். பின்பு கடற்கரையில் சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்ந்து மறுநாள் அக்டோபர் 15ம் தேதி செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் தெருவீதி உலா சென்று மாலை சுமார் 5 மணி அளவில் கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும்.தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களுக்கு காப்பு அவிழ்க்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் நெல்லை அன்புமணி , தக்காரும் உதவி ஆணையருமான செல்லத்துரை, நிர்வாக அதிகாரி சங்கர் செய்து வருகின்றனர்.

...
Show commentsOpen link

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts