Wednesday, September 18, 2013

Why crow is black in colour? - காகம் எப்படிக் கருப்பானது?

Why crow is black in colour? - காகம் எப்படிக் கருப்பானது???

முன் காலத்தில் உலகமெங்கும் பறவைகளும், விலங்குகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. அப்போது ஒரு நாள் உலகமெங்கும் திடீரெனத் தாளமுடியாத வெக்கை உண்டானது. அதைத் தொடர்ந்து நெருப்புச் சுவாலைகள் எழுந்தன. இந்தச் சூடு பரவியதைக் கண்டு பறவைகள் கத்தத் தொடங்கின.

கடவுள் உடனே காகத்தினை வரச் சொன்னார். அச்சமற்ற போர் வீரர்களாக அப்போது காகங்கள் இருந்தன. அதுவும் வெண்ணிறக் காக்கைகளாகவே அவை இருந்தன.

'பாதாள உலகில் இரும்பு உருக்குகிறார்கள். அதனாலேயே தீச்சுவாலைகள் எழுகின்றன. அதனை நிறுத்தி விடச் சொல்' என்றார். காகம் நீண்ட நாள் பயணம் செய்து பாதாள லோகத்தின் இரும்புக்குழாய் உருக்குமிடத்துக்குச் சென்று, கடவுள் கட்டளையைச் சொன்னது. அங்கிருந்த அசுரர்கள் இதைக் கேட்டுச் சிரித்துக் கேலி செய்ததுடன், அதன் மீது இரும்புக் கரித்தூளையும் எடுத்து வீசினார்கள்.

அந்த வெக்கை தாளாமல் காகத்தின் உடம்பெங்கும் கரித்துகள் ஒட்டிக் கொண்டது. அதனாலேயே காகம் தன் அழகிய வெண்ணிறத்தை இழந்து கருமை நிறமாக மாறிப்போனது.

கடவுள், காகம் நிறம் மாறித் திரும்பி வருவதைப் பார்த்துக் கோபம் கொண்டு, இரும்பு உலையைப் பாதாளத்தின் வெகு ஆழத்தில் கொண்டு போய்ப் புதைத்துவிட்டார். அச்சமற்ற காகம் கருப்பாக இப்போதும் தைரியமாகக் கத்தியலைகிறது.

- thanks to Mr. Siva -

Attached Images
index.jpg (13.4 KB)
Show commentsOpen link

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts