Thursday, September 19, 2013

உங்களுக்கு என்ன சார் பிரச்சன ? Mobile customer care

படித்ததில் பிடித்தது :
by Marikumar

"சார்,, எனக்கு ஒன்னும் இல்ல சார் நான் நல்லா தான் இருக்கேன்,, இப்ப தான் சிக்கன் பிரியாணி சாப்ட்டு நூறு ரூவாய்க்கு டாப் அப் போட்டேன்,, அதுல அம்பது ரூவாய யாரோ கிளப்பிட்டாங்க,, அது யாருன்னு கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்க,,"

"உங்க நம்பர செக் பண்ணி பார்த்துட்டேன்,, நீங்க மிஸ்ட் கால் அலர்ட் சப்ஸ்க்ரைப் பண்ணிருக்கீங்க,, நீங்க மொபைல சுவிட்ச் ஆப் பண்ணிருக்கும் போது/ நாட் ரீசபில்ல இருக்கும் போது யாரவது கால் பண்ணா உங்களுக்கு மெசேஜ் வரும், அதனால தான் உங்க பேலன்ஸ்ல அம்பது ரூவா டெடியூஸ் பண்ணிருக்கோம்,,"

"நானே ரெண்டு வாரமா மொபைலுக்கு ஒரு கால் கூட வராம சும்மா தான் வச்சிட்டு இருக்கேன்,, டைம் பாக்குறதுக்கு தான் 'போன' யூஸ் பண்ணிட்டு இருக்கேன்,, நான் ஏன் சார் இதெல்லாம் பண்ண போறேன் ??"

"இல்ல சார் நீங்க தான் சப்ஸ்க்ரைப் பண்ணிருக்கீங்க,,"

"சரி சார் நான் தான் 'சப்ஸ்க்ரைப்' பண்ணேன்னு வச்சுக்கோங்க,, ஆனா அந்த மாதிரி எந்த மெசேஜும் எனக்கு வரலயே,,"

"அது உங்களுக்கு யாரவாது கால் பண்ணா தான் சார் வரும்,,"

"அதான் சார் நானும் சொல்றேன்,, எனக்கு யாருமே கால் பண்றதே இல்ல,, நான் எதுக்கு சார் இதெல்லாம்,,,"

"நீங்க எதுனாலும் எங்க உயர் அதிகாரிட்ட பேசுங்க,,,"

(அவர் கடுப்பாகி மேலதிகாரிட்ட போன் லைன் குடுத்தாரு)

"சொல்லுங்க சார்,, வாட் யூ வாண்ட் அஸ் டு டூ ??"

"எவ்வளவு நேக்கா ஆட்டய போடுறீங்க,, எங்க சார் கத்துகிட்டீங்க இந்த திறமைய எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி தாங்க,,"

"இல்ல சார் எல்லாம் ரூல்ஸ் படி தான் நடக்குது,, உங்களுக்கு வேண்டாம்னா நீங்க அன் சப்ஸ்க்ரைப் பண்ணிக்கலாம்,,"

"முதல்ல சப்ஸ்க்ரைப் பண்றது எப்படின்னு சொல்லுங்க சார் ,,"

"அது நீங்க ஏற்க்கனவே பண்ணிடீங்க சார்,, உங்களால் இப்ப அன் சப்ஸ்க்ரைப் தான் பண்ண முடியும்,,"

"அன் சப்ஸ்க்ரைப் பண்ணா அம்பது ரூவா திரும்ப வந்துடுமா சார்,,??"

"அது வராது சார்,,"

"அம்பது ரூவா ஆட்டய போட்டா தப்பா சார் ??"

"சாரி சார்,,, என்ன சொல்றீங்க ??"

"அஞ்சு கோடி பேர் கிட்ட ஐநூறு தடவ அம்பது ரூவா ஆட்டய போட்டா தப்பா சார் ??"

"நீங்க ஏர்டெல் பிரச்சனை சம்பந்தமா மட்டும் தான் இங்க பேசனும் சார்.."

"அத பத்திதான் சார் பேசிட்டு இருக்கேன் ,,,நீங்க என்கிட்டே அம்பது ரூவா வேணும்னு கேட்டிருந்தா நான் ஐநூறு ரூவா உங்களுக்கு குடுத்திருப்பேன் சார்,,"

"சார் அக்சுவலி,, நீங்க பேசுறது எல்லாம் இப்ப ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கு,,"

"ரெம்ப நன்றி சார்,, அப்படியே அத டி.வில ரோடியோல ஒலி/ ஒளி பரப்புங்க,, எல்லாரும் தெரிஞ்சுக்கட்டும்,,"

(டொயிங்.... டொயிங்.... டொயிங்,,, லைன் கட்டாகிடுச்சு )
Share |

Show commentsOpen link

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts