Tuesday, September 24, 2013

ஒரு வெப்சைட்டை பிளாக் செய்வது எப்படி? How to block website in your system

ஒரு வெப்சைட்டை பிளாக் செய்வது எப்படி?
by Marikumar
டிப்ஸ்Yesterday, 23:40
இன்றைய நவீன உலகில் இன்டர்நெட்டின் தேவைகள் ஒரு அத்தியாவசிய விஷியமாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இன்டர்நெட்டை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இன்டர்நெட் இன்றைய மக்களின் பல தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.

இன்டர்நெட்டின் மூலம் எந்த அளவிற்க்கு பயன்கள் அதிகமாக இருக்கிறதோ அதே அளவுக்கு அதில் தீமைகளும் அதிகம் உள்ளன. இன்று பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் இன்டர்நெட்டின் தேவைகள் அதிகம் உள்ளன. குழந்தைகள் இன்டர்நெட்டின் மூலம் தவறான வழிகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

இன்டர்நெட்டில் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் தேவையற்ற இணைய பக்கங்கள் அல்லது தகவல்கள் வந்து விடுவது உண்டு. இது போன்ற இக்கட்டான சூழ்நிலையை தடுக்க நாம் தேவையற்ற தவறான வெப்சைட்களை பிளாக் செய்வது பாதுகாப்பானதாகும். ஒரு வெப்சைட்டை பிளாக் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

விண்டோஸ் எக்ஸ்பிளோரரை ஓபன் செய்து C:/Windows/System32/drivers/etc. என டைப் செய்யுங்கள். C: டிரைவில் விண்டோஸ் இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றால் எந்த டிரைவில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதோ அந்த டிரைவின் பெயரை டைப் செய்யுங்கள்.

hosts என்பதில் டபுள் கிளிக் செய்யுங்கள். பின்பு அதில் இருக்கும் டாக்குமெண்டை விண்டோஸில் இருக்கும் நோட்பேடை கொண்டு ஓபன் செய்யுங்கள்.

hosts வேறு புரோகிராமில் ஓபன் ஆகிவிட்டால் Start - All Programs -Accessories - Notepad சென்று நோட்பேடை ஓபன் செய்திடுங்கள் பின்பு hosts fileயை நோட்பேடில் ஓபன் செய்யுங்கள்.

அதன் பின் நோட்பேடில் ஓபன் ஆன டாக்குமென்டில் "127.0.0.1 localhost" or "::1 localhost." என்பதை பார்த்து அதன் லைனின் முடிவில் கர்ஸரை வையுங்கள். பின்பு என்டர் தட்டினால் ஒரு புது லைனுக்கு செல்லும்.

புது லைனில் 127.0.0.1 என டைப் செய்து சிங்கிள் ஸ்பேஸ் விட்டு நீங்கள் எந்த வெப்சைட்டை பிளாக் செய்ய நினைக்கிறீர்களோ அந்த வெப்சைட்டை டைப் செய்யுங்கள். உதாரணமாக நீங்கள் reddit.com என்ற வெப்சைட்டை பிளாக் செய்ய எண்ணினால் 127.0.0.1 reddit.com என டைப் செய்யுங்கள்.

பின்பு file மெனுவுக்கு சென்று இந்த hosts fileயை save செய்திடுங்கள் .

நீங்கள் Admin ஆக இல்லையென்றால் fileயை save செய்ய முடியாது என்று கம்பியூட்டர் சொன்னால் Properties - Securityக்கு சென்று உங்கள் யூஸர் அக்கவுன்டில் இருக்கும் எல்லா பாக்ஸையும் செலக்ட் செய்திடுங்கள். இதன் மூலம் நீங்கள் fileயை save செய்யலாம்.
Share |

Show commentsOpen link

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts