Friday, September 27, 2013

உணவு உட்கொண்ட பின்னர் எதனை தவிர்க்க வேண்டும் after lunch

உணவு உட்கொண்ட பின்னர் எதனை தவிர்க்க வேண்டும்

by Marikumar

ஒருவர் நல­மாக இருப்­ப­தற்கு உணவு, உடற்­ப­யிற்சி, நல்ல பழக்க வழக்­கங்கள் என பல கார­ணங்கள் கூறி­னாலும், அனைத்­திலும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது நம்­மு­டைய உணவுப் பழக்­கம்தான். சாப்­பி­டும்­போது தண்ணீர் குடிக்­க­லாமா? சாப­பிட்­ட­வுடன் பழங்கள் சாப்­பி­டு­வது சரியா? என நம் மனதில் பல்­வேறு கேள்­விகள் எழு­கின்­றன. உண்­மையில் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்!

நம்­மு­டைய உடலின் ஒவ்­வொரு உறுப்பும் இயங்கத் தேவை­யான ஆற்றல் மற்றும் ஆக்­ஸி­ஜனை இரத்தம் கொண்டு செல்­கி­றது. உணவு உட்­கொண்­டதும் இரைப்­பையின் செயல்­பாடு அதி­க­ரித்து, மூளைக்குச் செல்லும் இரத்­தத்தின் அளவு குறைய வாய்ப்பு இருக்­கி­றது. இத­னா­லேயே உணவு உட்­கொண்­டதும் ஒரு­வித மந்த நிலை ஏற்­ப­டு­கி­றது.

சாப்­பிட்­டதும் தேநீர் அருந்­த­லாமா?

கூடாது. ஏனெனில், தேயி­லையில் சில அமி­லங்கள் உள்­ளன. இது, புரதச் சத்­தையும், செரி­மா­னத்­தையும் கடி­ன­மாக்கி விடு­வ­தற்­கான வாய்ப்பு அதிகம். சாப்­பிட்டு அரை முதல் ஒரு மணி நேரங்­களின் பின்னர் தேநீர் அருந்­தலாம்.

சாப்­பிட்­டதும் சிகரெட் பிடிப்­பது தவறா?

சிகரெட் பிடிப்­பதே ஆரோக்­கி­ய­மா­னது அல்ல. சாதா­ர­ண­மாக ஒரு சிகரெட் பிடித்தால் எவ்­வ­ளவு பாதிப்பு ஏற்­ப­டுமோ, அதை விட சாப்­பிட்­டதும் சிக ரெட் பிடிக்­கும்­போது 10 மடங்கு பாதிப்பு ஏற்­படும். எனவே, சிகரெட் பிடிப்­பதை முற்­றிலும் நிறுத்த முடி­யா­விட்­டாலும், சாப்­பிட்­டதும் சிகரெட் பிடிப்­ப­தை­யா­வது நிறுத்த வேண்டும்.

சாப்­பி­டும்­போது குளிர்ந்த நீர் அருந்­த­லாமா?

உணவு உட்­கொண்­டதும், குளிர்ந்த நீரோ, குளிர்­பா­னமோ குடிப்­ப­வர்­க­ளுக்கு இதயம், சிறு­நீ­ரகம் போன்­றவை பாதிப்­ப­டைய அதிக வாய்ப்பு உண்டு. மேலும், நெஞ்சு எரிச்சல், உயர் இரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்­க­வாதம், வயிற்­று­வலி, மைக்ரேன் தலை­வலி, மூளை உறைவு நோய், பற்­சி­தைவு போன்­றவை ஏற்­படக் கூடும். சாப்­பிட்ட உணவில் உள்ள எண்ணெய், இரத்த நாளங்­களில் தங்கி அடைப்பை உண்­டாக்­கி­விடும். குறிப்­பாக, மார­டைப்பு போன்ற இதய நோய் வரு­வ­தற்­கான வாய்ப்பு உள்­ள­வர்கள், சாப்­பி­டும்­போது குளிர்ந்த நீரைப் பரு­கவே கூடாது. வெது­வெ­துப்­பான நீர் அருந்­து­வது, செரி­மானத் திறனை மேம்­ப­டுத்தும்.

சாப்­பிட்­டதும் குளிக்­க­லாமா?

இதனை தவிர்க்க வேண்டும். குளிக்­கும்­போது கை, கால், உடல் பாகங்­களில் இரத்த ஓட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால், இரைப்­பைக்கும் செரி­மா­னத்­துக்கும் தேவை­யான இரத்த ஓட்டம் குறைந்து விடும். இதனால், உணவு செரி­மான மண்­டல உறுப்­புகள் பாதிப்­ப­டையும்.ஆகையால் சாப்­பிட்­ட­வுடன் குளிப்­பதை தவிர்ப்­பது சிறந்­தது.

சாப்­பாட்­டின்­போது அல்­லது சாப்­பிட்டு முடித்­ததும் பழங்கள் சாப்­பி­ட­லாமா?

உண­வுக்கு இடையில் அல்­லது முடித்­த­வுடன் பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது. அப்­படி எடுத்துக் கொண்டால், வயிற்­றுக்குள் உப்­புசம் ஏற்­படும். எனவே சாப்­பி­டு­வ­தற்கு ஒரு மணி நேரத்­துக்கு முன்போ அல்­லது பின்­போதான் பழங்­களைச் சாப்­பிட வேண்டும். இப்­படி இடைவெளி விட்டுச் சாப்­பி­டும்­போது செரி­மானத் திறன் மேம்­படும்.

சாப்­பிட்­ட­வுடன் தூங்­க­லாமா?

மதிய உணவு, இரவு உண­வுக்குப் பின்னர் உடனே தூங்கச் செல்­லக்­கூ­டாது. உண­வுக்குப் பின் குறைந்­தது அரை­மணி நேரத்தின் பின்­னரே தூங்க செல்ல வேண்டும்.

சாப்­பிட்­டதும் உடற்­ப­யிற்சி, நடைப் பயிற்சி செய்­ய­லாமா?

சாப்­பிட்ட பின்பு நடப்­பது நல்­லது அல்ல. நடந்தால், செரி­மான உறுப்­பு­க­ளுக்குச் செல்லக் கூடிய இரத்த ஓட்டம் தடைப்பட்டு, கால்களுக்குச் செல்லும். உணவில் உள்ள சத்துகள் முழுமையாக இரத்தத்தில் கலப்பதற்கு இடையூறாக இருக்கும். இதனால், உணவு சரியாக செரி மானம் ஆகாமல், சத்துக்கள் அனைத்தும் வீணாகும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் சும்மாவே இருப்பதுதான் சிறந்தது.
Share |

Show commentsOpen link

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts