Wednesday, July 31, 2013

மொளனம் சம்மதமாகாது

அன்பு நண்பர்களுக்கு

கான்பட் மின்னஞ்சல் குழுமம் என்பது நமது உறுப்பிணர்கள் தங்களுது கருத்துக்களையும் தாங்கள் தெரிந்துகொண்ட பிறவிசயங்களையும் நமது சக தொழில் தோழர்களும் தெரியும் வண்ணம் எடுத்துரைப்பதற்க்கு முழு உரிமை கொண்டதாகும். இதில் அளவுகடந்த கட்டுபாட்டினை விதிப்பது தொடர்ப்பு வட்டாரத்தை சுருக்கிவிடும் என்பதில் சிறதளவும் சந்தேகமில்லை. எனினும் கான்பட் மின்னஞ்சல் குழுமம் பற்றிய கீழ்கானும் எனது கருத்துக்களை இங்கு பகிர்கிறேன்.

1.     கான்பட்டின் உறுப்பிணர் என்பது ஓவ்வொரு சங்கமே இன்றி தனிநபர்கள் அல்ல. தனிப்பட்ட சங்கத்தின் உறுப்பிணர் பற்றிய விவரம் வேண்டும் என்றால் அந்த அந்த சங்க பிரதிநிதிகளிடம் கேட்டு தான் வாங்க வேண்டும். (வருட வருடம் வாங்குவது நல்லது). அவ்வாறு செய்தால் தான் அந்த சங்க பிரதிநிதிகளுடன் ஒரு இணக்கமான உறவு மேம்படும். அதை விடுத்து நேரடியாக பெறுவது உகந்ததல்ல. பிற்காலத்தில் எந்த தனிநபரும் அத்துமீறி உள்ளே வருவதற்கான வாய்பினை நாம் தரகூடாது.

2.      கான்பட் என்பது நமது தொழில் சார்ந்த சங்கங்ளின் கூட்டமைப்பே இன்றி தனியார் ஸ்தாபனம் அல்ல. இங்கு அனைத்து உறுப்பிணர்களும் சமமே. அனைத்து உறுப்பிணர்களும் சமம் என்கும் போது உறுப்பிணர்களின் உறுப்பிணர்களும் சமமே. உரிமை என்று வரும் போதும் அனைவருக்கும் சம உரிமை உண்டு. எழுத்துரிமை, கருத்துரிமை போன்ற எந்த உரிமை ஆயுனும் யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதில் மற்றவர்களை புண்படுத்தாமல் பார்த்துகொள்ளவேண்டும்.
3.
       கான்பட் மின்னஞ்சல் குழுமம் என்பது தினசரி பத்திரிக்கை என்றுகூட சொல்லலாம். காசு கொடுத்து வாங்கினாலும் தினசரி பத்திரிக்கையில் வரும் அனைத்து தகவல்களையும் நாம் படிப்பதில்லை. அங்கத்தின் தலைப்பு பிடித்தால் படிக்கிறோம். இல்லையேல் தலைப்புடன் தவிர்த்து விடுகிறோம். அதை போல் தான் இதில் தினமும் வரும் மெயில்களும்.

4.       பொதுவாக நமது உறுப்பிணர்கள் அவர்களின் கருத்தினை பகிர நமது மெயில் குருப் தான் ஒரே வழி. அதில் ஒன்று இரண்டு மூன்று என்று அதிகப்படுத்தி கொண்டு செல்வது பழுவினை அதிகப்படுத்துமே இன்றி குறைக்காது.

5.       ஒரு முடிவை செயற்குழுவில் எடுத்தாகிவிட்டது என்ற காரணத்தால் அதை கொண்டு சம தோழர்களின் மேல் ஆதிக்கத்தை செலுத்துவது ஒரு கூட்டமைப்பின் நல்ல பண்பு அல்ல. இன்னொரு மெயில் குழுமத்தை உருவாக்கினாலும் உறுப்பிணர்கள் அவர்கள் விருப்பம் போல் எதில் வேண்டுமாயுனும் மெயில்களை தொடர முழு உரிமை உண்டு. மீறி அடக்குமுறையினை கையாண்டால் நமக்காக மெயில் போடும் அண்பர்கள் மெயில் போடுவதை நிறித்திக்கொள்ளும் வாய்ப்பே அதிகம் உள்ளது.

6.       செயற்குழுவில் எடுத்து முடிவு என்று சொல்லி அனைவரையும் அதை பின்பற்றவேண்டும் என்பதும் செம்மையானதல்ல. அதில் மாற்று கருத்து இருப்பின் எந்த சாதாரன உறுப்பிணரும் எடுத்துரைக்க உரிமை உண்டு. அவ்வாறாக வரும் மாற்றுகருத்தில் நியாயம் இருப்பின் அதை ஏற்றுகொள்ளவும் தயங்காத ஒன்றே தலைமை பண்பாகும்.

7.        ஏதோ காரணத்தால் ஒரு மெயில் சர்ச்சையை கிளப்புகிறது என்றால் அதன் ஆனிவேரை கண்டு அதை கலைத்தல் நல்லது. அதை அந்த தாய்சங்கத்தின் பிரதிநிதிகளை கொண்டு செய்வது மேலும் சிறப்பு.
இவை எனது சில கருத்துக்களே. இதில் எனக்கேதும் தனிப்பட்ட முறையில் லாபமோ நஷ்டமோ கிடையாது. இதை இங்கு தெரிவிப்பதற்கு எனது தாய் சங்கத்தின் உறுப்பிணர் என்ற ஒரு உரிமை போதும்.
இது கட்டுரையும் அல்ல, கதையும் அல்ல, காவியமும் இல்லை. எந்த தனி நபரையோ புன்படுத்தும் எழுத்துக்களும் இதில் இல்லை.  எவ்வித தரக்குறைவான சொற்களும் இதில் கையாளப்படவில்லை என உறுதி அளிக்கிறேன்.
நன்றியுடன்


C.Balakrishnan

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts