Thursday, October 31, 2013

எருமை மாடுமாதிரி tamil facebook comedy tamil facebook jokes

அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்த இளைஞன்.....

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக்கொண்டிருந்த

ஒரு இளைஞன். அடிக்கடி

நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்தான்.

பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து,
மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி

ஒரு நாள், "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு,

ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே(மிருக டாக்டர்)போய்உடம்பைக் காட்டுங்க!

அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள்.

என்னது
மிருக டாக்டர்கிட்டேயா?

உனக்கென்ன மூளைகெட்டுப் போச்சா?'ன்னு சீறினான் கணவன்.
'எனக்கொண்ணும் கெட்டுப் போகல!

உங்களுக்குத்தான் எல்லாமேகெட்டுப் போய் கிடக்கு!

காலாங் காலத்தாலே கோழி மாதிரிவிடியறதுக்கு
முன்னமேயே

எழுந்திருக்கீங்க!

அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,

குரங்கு மாதிரி' லபக் லபக்'னு ரெண்டு வாய்தின்னுட்டு,

பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப்போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!

உங்களுக்கு கீழேவேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!

அப்புறம் ஆபிஸ்விட்டவுடனே,

ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்குவர்றீங்க!

வந்ததும்வராததுமா,நாள்பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே

நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க!

அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை 'சரக் சரக்'னு முழுங்கிட்டு,

எருமை மாடுமாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சாஅதேமாதிரி

கோழி கதைதான்!இப்படி இருக்கிறவங்களை

மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்?

அதனாலதான் சொல்றேன், நாளைக்கே

ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!

"என்று ஒரே மூச்சில்சொல்லி முடித்தாள் மனைவி.

என்னபதில்சொல்வதென்றுதெரியாமல்

கணவன் முழிக்க,

மனைவி சொன்னள்`

கோட்டான் மாதிரி முழிக்காதீங்க'.

Source: Facebook

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts