Saturday, September 14, 2013

அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது tamil news 1

அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது

by tnkesaven
New Tamil Jokes - Penmai.comToday,

புதுமணத்தம்பதிகள் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்பது இன்றுவரை நடைமுறையில் உள்ள வழக்கம். ராமரின் குலகுருவான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. இவர்கள் மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். இதன் விளைவாக இவர்கள் வானமண்டலத்தில் நட்சத்திரங்களாக ஒளிரும் பேறு பெற்றனர். இவர்களைப் போல் மணமக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது ஆன்மிக காரணம்.
இதையே அறிவியல் ரீதியாகவும் பார்க்கலாம். புராணங்களில் "சப்தரிஷி மண்டலம்' என்று சொல்வார்கள். "சப்தம்' என்றால் "ஏழு'. ஏழு முக்கிய ரிஷிகள் ஒன்றாக இணைந்து நட்சத்திரமாக ஜொலிக்கிறார்கள். . இந்த ஏழு நட்சத்திரங்களில் நான்கு, நாற்கோண வடிவத்தின் முனைகளாக இருக்கும்.
மற்ற மூன்றும் "பட்டம்' போல இருக்கும்.

இந்த பட்டத்தின் வாலில், நடுவில் இருப்பது வசிஷ்ட நட்சத்திரம் என்னும் "மிசார்'.

அதை ஒட்டி மெல்லியதாக இருப்பது அருந்ததி என்னும் "அல்கார்'. இந்த இரு நட்சத்திரங்களும் ஒரே ஈர்ப்பு மையத்துடன் சுழல்பவை.
அதாவது ஒன்றுக்கொன்று ஈர்ப்புடையவை.

இந்த நட்சத்திரங்களைப் போல, புதுமணத்தம்பதிகளும் ஒருவருக்கொருவர் ஈர்ப்புத்தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது அருந்ததி பார்ப்பதின் தத்துவம். அன்றைய தினம் டெலஸ்கோப் போன்ற எந்த நவீன வசதியும் இல்லாமலே, இதையெல்லாம் எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ நம் முன்னோர்கள்!

courtesy;''dinamalar

Show commentsOpen link

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts