Tuesday, August 6, 2013

நாவல் பழம்

நாவினிக்க நாவல் பழம்!

நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற
குளூக்கோசைட் உள்ளது,
இதன் செயல்பாடு உடலுக்குள்
ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும்
செயல்பாடு தடுக்கப்படுகிறது.

இதனால் நாவல்
பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுபாட்டில்
இருக்க்கும் என்பது லக்னோவில் உள்ள
நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையத்தில் நடந்த
ஆய்வில் தெரிய வந்தது,

பலன்கள்:
தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல்
பழத்தை மதிய உணவுக்குப்பின்
சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல்
பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும
நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.
பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத்
தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

மூளை பலமாகும். நல்ல ஜீரண
சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம்
போல் தயாரித்து சாப்பிடும்
போது வாயுத்தொல்லை நீங்கும்.

பித்தத்தைத் தணிக்கும்,மலச்சிக்கலைக்
குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச்
செய்யும். ரத்த சோகை நோயைக்
குணப்படுத்தும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும்
நிவர்த்தி செய்யும்.ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யும்
ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.

இதனால் ரத்தத்தின் கடினத்
தன்மை மாறி இலகுவாகும்.
தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால்
குடல், இரைப்பை இதயத்தின் தசைகள்
வலுவாகும்

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts