எந்த காரணத்தைக் கொண்டும் காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வரவே கூடாது: வைகோ பேச்சு Vaiko speech Congress don not come rule
மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணம் என்ற பெயரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திறந்த வேனில் சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார்.நேற்று மாலை வைகோ ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு இடங்களில் பேசினார். கணேச மூர்த்தி எம்.பி. தலைமை தாங்கினார்.
முதலில் அவர் சோலாரில் பேசினார். தொடர்ந்து பல்வேறு ஊர்களில் சென்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க. கண்டிப்பாக போட்டியிடும். இப்போது எம்.பி.யாக இருக்கும் கணேசமூர்த்தியே போட்டியிடுவார். ஏனெனில் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது.
வரும் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் ஜெயித்து ஆட்சிக்கு வரவே கூடாது. ஊழல் மலிந்த காங்கிரஸ் எக்காரணம் கொண்டும் இனி வரக்கூடாது. காங்கிரசை தூக்கி எறிய வேண்டும். ம.தி.மு.க.விடம் பண பலம் கிடையாது. ஆனால் நேர்மை இருக்கிறது. நாணயம்... நன்னடத்தை இருக்கிறது. இதனால்தான் இங்கே வாக்காளர்களாகிய உங்களை சந்திக்கும் துணிச்சல், தைரியம், உரிமை இருக்கிறது.
ம.தி.மு.க. மற்ற திராவிட கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடாது. தேர்தலுக்காக வாக்காளர்களை சந்திக்கும் விதமாக ம.தி.மு.க. இந்த பயணத்தை தொடங்கி உள்ளது. ஆகவே வரும் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பம்பரம் சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
மேலும் இதில் தொண்டர் அணி துணை செயலாளர் முசிறி ரவிச்சந்திரன், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
I do not know why HE is telling like this, HE will support one party today and support another party tomorrow, What a wonderful idea.Corruption prevalent in every party.No one can stop it. CONGRESS and DMK are the BEST Tamilnadu political parties.There is no doubt.Public do not know how he spends money to lead his party.What fault did he find in Our CM, Kalaignar,Communist partiy and other congress VIPS. Avoiding such speeches he should try to take action in eradication a=of poverty and upliftment of downtroden.
ReplyDelete