அஜித் இன் வீரம் திரைப்பட கதை இது தான்!
by abtamil
Tamil newsToday,
அஜித்தின் ஆரம்பம் கிராண்ட் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் அஜித்தின் அடுத்த படமான வீரம் விறுவிறுவென வளர்ந்து வருகிறது.
இந்தப் படத்திற்காக ஒடிஷா, ஆந்திரா பார்டரில், ரெயில்வே டிராக்கில் சீட்டு நுனிக்கு நகர்த்தும் த்ரில்லர் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாம்.
வரும் ஷெட்யூல்கள் கேரளா, மற்றும் பொள்ளாட்சியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தப் படத்தின் கதை என்னவென்பது கோடி காட்டப்பட்டுள்ளது.
கிராமம் ஒன்றில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பகைமைதான் மையக்கருவாம். இதில் ஒருகுடும்பத்தின் மூத்த மகன் ரோல் அஜித்திற்கு. பிரதீப் ராவத் வில்லன்.
அஜித்திற்கு ஜோடி தமன்னா,. அஜித்தின் தம்பியாக வித்தார்த் நடிக்கிறார். காமெடி ஏரியாவை சந்தானம் கவனித்துக் கொள்கிறார்.
படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத்.
Show commentsOpen link

No comments:
Post a Comment