தமிழா! தமிழா!
by (SENTHIL KUMAR J)
RSS 2.0 - News UpdatesToday,
தமிழா தமிழா தமிழ் நாட்டில்
வாழும் தமிழா !
நம் வீரம் எங்கே ?
தன்மானம் எங்கே ?
நம் கலை எங்கே ?
கலாச்சாரம்தான் எங்கே ?
நம் பண்பாடு எங்கே ?
பயணம்தான் எங்கே ?
இறந்தும் இலக்கணமாய் திகழ்கிறான்
இலங்கை தமிழன்
\"தமிழுக்கும் தமிழனுக்கும்\" !
ஆங்கிலத்தில் பேசுவதையே
அலாதியாகக் கொண்டு
ஆங்கிலத்தில் பேசியபடியே
தமிழ் மொழியையே கொள்கிறான்
தமிழ் நாட்டில் உள்ள தமிழன் !
வறுமையில் நாம் வாழ
நம் வறுமையில் பலர் வாழ
அதை எண்ணி எண்ணி - தினமும்
இங்கே இளைத்தோமே தோழனே !
என்று இந்த நிலை மாறும்
என்று எண்ணி ஏங்காதே !
என்னால் இந்த நிலை மாறும்
நாளை வரும் சந்ததிகள்
யாவும் நலம் காணும் !
என்று சொல்லி புறப்படு
புது புரட்சி செய்வோம் தோழனே !
உன்னால் முடியும் தோழா !
என்னால் முடியும் தோழா !
நம்மால் முடியும் தோழா !
நாளை உலகை நலம்பெற செய்வோம்
வா வா என் தோழா !
வந்தோரை வாழ வைக்க
நம் வாழ்வை தாரை வார்த்தோம் !
அன்றோடு நம் தரத்தை
நாம் இழந்து விட்டோமே !
இழந்ததை எல்லாம் மீட்க்க
இழக்கம் கொண்டு போரிட்டோம் !
இருந்தாலும் இன்றுவரை இழப்பை
தவிர வேறொன்றும் மிச்சமில்லை !
இங்கே ஒரு பெண் ( சோனியா )
செய்த சூழ்ச்சி !
அங்கே நாம் கண்டோம்
பல பெண்கள்
கற்பை இழந்த காட்சி !
இங்கே ஒரு நரி (கருணாநிதி)
செய்த சூழ்ச்சி
அங்கே நாம் கண்டோம்
லட்சம் பேர் மாண்ட காட்சி !
லட்சம் பேர் இறந்தாலும்
லட்சியவாதிகளை எல்லாம் இழந்தாலும் !
ஈழ தமிழன் விடுதலை என்றும் இறவாது !
லட்சியாதை அடையும் வரை
ஓயமாட்டோம் என்று சொல்
வீரத் தமிழனே !
No comments:
Post a Comment