குரலால் உலகை ஈர்த்த எம்.எஸ். சுப்புலெட்சு
by tnkesaven
New Tamil Jokes - Penmai.comToday,
தன் குரலால் உலகை ஈர்த்த எம்.எஸ். சுப்புலெட்சுமியின் பிறந்த நாள் இன்று!
செப்டம்பர் 16 1916 அன்று பிறந்த இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடி மக்களின் அன்பை பெற்றவர்.
பல நாடுகளுக்கும் பண்பாட்டு தூதராக சென்று நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
ஐ.நா அவையிலும் இவரது நிகழ்ச்சி நடந்திருக்கிறது.
இவருக்கு பத்மபூஷன்,
சங்கீத கலாநிதி, இசைப்பேரறிஞர், மக்சேசே பரிசு
பத்ம விபூசண், காளிதாச சன்மான்
நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது என அரசும் பல்வேறு அமைப்புகளும் தந்து கெளரவப்படுத்தி இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரமாய் 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை அளித்தது இந்திய அரசு.
இவரைப் பற்றிய மிக முக்கிய செய்தி
இவர் நடித்து வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது.
அதே போல கேதாரி நாத்திலிருந்து கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது.
1944 இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார்.
மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது.
இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.
இத்தகு சிறப்பு வாய்ந்த எம்.எஸ். சுப்புலெட்சுமியின் பிறந்த நாள் இன்று!
chuttivikatan/fb
Show commentsOpen link
No comments:
Post a Comment